Deva suthan yuirthaar – தேவசுதனுயிர்த்தார்

பல்லவி
தேவசுதனுயிர்த்தார் – மிருதினின்று
அனுபல்லவி
பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி – தேவ
சரணங்கள்
1.நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்க
பொல்லா எமனுடமன மிலங்க – தேவ
2.மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்க
துஷ்ட அலகை மனங்கலங்க- தேவ
3.பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப்
பரமும்,வரமும்,திறமும்,மருவும்
படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ
4.கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரே
கெடிசெய் கொடியன் கடியுமிடியும்
கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ

Leave a Comment