ஆதியும் அந்தமுமானவரே – Aathiyum Anthamumaanavare Lyrics

ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே
1. சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
நிலைவரமானவரே
2. ஒருமனதோடே தேடுவோரே
உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை
உடனடி அளிப்பவரே
3. தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை
தாராளமா யிடுவேன் என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
மேவியே இன்று ஈவீரே
4. பாவிக்கு பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய் தோன்றினீரே
பாதகன் போல பாரக் குருசில்
தேவனே தொங்கினீரே
5. சீக்கிரமாய் இதோ வருபவரே
மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
மாசற்றோராய் உம் மகிமையில் சேர
மன்னவனே அருள் ஈவாரே

Leave a Comment