இந்த வேளை வரவேணும் – Intha Vealai Varavenum lyrics

இந்த வேளை வரவேணும் என் இயேசு நாதா
இந்த வேளை வரவேணும்
இந்த வேளை வரவேணும் என் துயரம் தீரவேணும்
சிந்தை காட்சி தரவேணும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த
1. மெத்தவே துயரமாகினேன் வெயிலைக் கண்ட
மெழுகு போல் உருகி வாடுகிறேன்
கர்த்தனே கடாட்சம் வைத்துக் காட்சி தர வாருமையா
சித்தம் வைத்துக் காத்தருளும் சீயோன் மலை இயேசுநாதா – இந்த
2. பத்துத் தலை கோபுரங்களாம் பொன்னாலே செய்து
பளிங்கு மாமணி மண்டபங்களாம்
அத்தனையும் விட்டிறங்கி ஆதரிக்க வாருமையா
செத்த பாவியை எழுப்பும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த
3. கூவியழும் பாவிகட்கெல்லாம் உமது வல்ல
ஆவியை அருளும் இரட்சகா
பாவியின் இருதயத்தில் ஆவியின் கனி பழுக்க
தேவ நதி பாயச் செய்யும் சீயோன் மலை இயேசு நாதா – இந்த

Leave a Comment