உளமார்ந்த நன்றி சொல்கிறேன் – ULLAMAARNDA NANDRI

உளமார்ந்த நன்றி சொல்கிறேன்
உள்ளம் நிறைவுடன்
நான் உம்மை பாடுவேன் (2)
உளமார்ந்த நன்றி சொல்கிறேன்…

1.வியாதியோடு தேடி வந்தேன்
சுகமானாய் என்று சொன்னீர்
போகும் வழியிலே
சுகமானேன் (2)
நன்றி சொல்ல திரும்பி வந்தேன்
உம்மை நான் மகிமைப்படுத்துவேன் (2) – உளமார்ந்த

2.தூரமாய் போனேனே சேதம் ஆனேனே
திரும்பி வந்து என்னை அணைத்தீரையா (2)
மன்னித்து ஏற்று கொண்டீர்
என்னை மறுபடி மகிழச் செய்தீர் (2) – உளமார்ந்த

3.அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வலையில் எதுவும் அகப்படவில்லை
அதிக பிரயாசத்தால்
பலன் ஒன்றும் கிடைக்கவில்லை
வாழ்க்கையில் ஒன்றும் நடைபெறவில்லை
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் படகு நிரம்பி வழிந்தது
நீர் ஒரு வார்த்தை சொன்னதினால்
என் வாழ்வு வளமானது – உளமார்ந்த

நன்றி ஐயா… இயேசுசைய்யா… நன்றி ஐயா (2)

Leave a Comment