1. ஏதென் பாவம் நீக்கிடும்
இரட்சகரின் இரத்தந்தானே!
ஏது சுத்தமாக்கிடும்?
இரட்சகரின் இரத்தந்தானே!
பல்லவி
மெய்யாம் ஜீவநதி!
பாவம் போக்கும் நதி!
வேறே நதியில்லை
இரட்சகரின் இரத்தந்தானே!
2. என்னைச் சுத்திகரிக்கும்
இரட்சகரின் இரத்தந்தானே!
மன்னிப்பெனக்களிக்கும்
இரட்சகரின் இரத்தந்தான! – மெய்
3. ஏதும் பாவம் போக்குமோ?
இரட்சகரின் இரத்தந்தானே!
என் கிரியை செல்லுமோ?
இரட்சகரின் இரத்தந்தானே! – மெய்
4. அல்லேலூயா பாடுவேன்,
இரட்சகரின் இரத்தந்தானே!
ஆனந்தம் புகழுவேன்,
இரட்சகரின் இரத்தந்தானே! – மெய்