Kartharukku Sthosthiram – கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

1. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!
மீட்போம் என்ற வாசகம்
தப்பில்லாமல் நாதனார்
மீட்பரை அனுப்பினார்.
2. முற்பிதாக்கள் யாவரும்
தீர்க்கதரிசிகளும்
சொல்லி ஆசைப்பட்டது
வந்து நிறைவேறிற்று.
3. வாழ்க, என் வெளிச்சமே!
ஓசியன்னா, ஜீவனே!
என் இருதயத்திலும்
தயவாய் பிரவேசியும்.
4. உள்ளே வாரும், ராயரே
இது உம்முடையதே;
பாவமான யாவையும்
நீக்கி என்னை ரட்சியும்.
5. நீர் சாதுள்ள தயவாய்
வந்தீர்; அந்த வண்ணமாய்
இப்போதென்மேல் மெத்தவும்
நீண்ட சாந்தமாயிரும்.
6. சாத்தான் வெகு சர்ப்பனை
செய்துமே என் மனதை
நீர் எல்லா பயத்திலும்
ஆற்றித் தேற்றிக்கொண்டிரும்.
7. உம்மால் பலம் பெற்றிட
மீட்பினால் கெம்பீரிக்க
சர்ப்பத்தின் தலையை நீர்
வென்றுமே நசுக்குவீர்.
8. மீண்டும் நீர் வருகையில்
ஜீவாதிபதி, என்னில்
உந்தன் திவ்விய சாயலும்
காணக் கட்டளையிடும்.

Leave a Comment