அரூபியே அரூப சொரூபியே
ஆரூபியே அரூப சொரூபியே – எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே.
திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன
சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான – அரூ
சரணங்கள்
1.ஆதி காரண அரூபியே – அசரீரி சத்ய
நீதி ஆரண சொரூபியே
வேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ர
தீதிலா துயர் விசித்ர ஜாதி யாருடபவித்ர- அரூ
2.சீரு லாவிய தெய்வீகமே –திரி முதல் ஒரு பொருள்
ஏரு லாவிய சிநேகமே
பாருளோர் பணிந்து போற்றும் ஆரிய அடியர் சாற்றும்
நேரமே புகழை ஏற்றும் வீரமாய் மனதை ஆற்றும்- அரூ
3.பக்தர் பாதகம் அடாமலே –பசா சுலகுடல்
சத்ரு சோதனை படாமலே
அத்தனார் தேவ கோபம் நித்ய வேதனைகள் சாபம்
முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம்.- அரூ