Visuwasa Yuththangal – விசுவாச யுத்தங்கள்

1. விசுவாச யுத்தங்கள்
செய்து ஜெயம் பெற்றோர்கள்,
பொற் கிரீடம் பெற்றிருக்கிறாராம்!
இதைக் கேட்கும் போது நான்
ஓர் வீரனாக ஏன்
கூடாதென்று நினைத்த உடனே!
பல்லவி
யுத்தவர்க்கங்கள் நான்
தரித்துக் கொண்டு
போர்புரியப் போறேன்
பின்வாங்க மாட்டேன்
ஓ! என் எதிரி நன்றாய் நீ அறிந்திடவே
நானிந்த சேனையிலோர் வீரன்
2. நானுமவரைக் கண்டு;
தேவ பட்டயங்கொண்டு
பாதாளச் சேனையை எதிர்ப்பேன்
ஜெயக்கிரீடம் தருவார்;
சிங்காசனம் பகர்வார்;
மகிமையில் பரலோக தேவன் – யுத்த
3. இதோ! ஒரே எண்ணமாய்
நானுமிந்த வண்ணமாய்
தேவ பலத்தால் வீரனாவேன்;
காலத்தைப் போக்காமல்
பயப்பட் டோடாமல்
நரகத்தின் சேனைகளை வெல்வேன் – யுத்த
4. நல்ல சேவகனாக
நீயும் யுத்தம் செய்ய வா!
காலத்தை வீணாய்க் கழிக்காமல்
சத்துருக்கள் நடுங்க,
பாதாளங்கள் கிடுங்க,
இயேசு சேனாதிபதியாய்ச் செல்வார்! – யுத்த

Leave a Comment