1. ஆத்துமமே நீ விழித்திடுவாய்
பயம் திகில் யாவும் நீக்கிடுவாய்
பரலோக பந்தயம் ஓடிடுவாய்
சந்தோஷ தைரியம் அடைவாய்
2. பாதை மிக ஒடுக்கமானதே
மானிட ஆவி சோர்வுள்ளதே
ஆனால் தேவ பக்தர்க்கு
வல்ல தேவன் பெலனளிப்பார்
3. உம் நிகரில்லா வல்லமை
என்றென்றும் நவமானதே
அனாதி காலமாய் நிலைத்து
யாவருக்கும் சக்தி ஈவாய்
4. வற்றாத ஜீவ ஊற்றண்டையில்
என் ஆத்மா என்றும் பானம்பண்ணும்
சுய பலத்தில் சார்ந்திடுவோர்
சேர்ந்து அழிந்து போய்விடுவார்
5. ஆகாயத்தில் செல்லும் கழுகைப்போல்
தேவ சமூகம் நாம் செல்வோம்
அன்பின் செட்டைகளாலே நாம்
சென்றிடுவோம் பரம நகர்