அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் – ஏழை
ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா!
1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் – இத்
தரணியில் யாதும் காணேன் தாரகம் நீயே – அஞ்சலோடு
2. நித்திரையில் விக்கினத்துட் புக்கிடாமலே – நின்
சித்தம் வைத்தெனை ரட்சித்த தேவே ஸ்தோத்ரமே – அஞ்சலோடு
3. இன்றடியான் செய்யும் வேலை யாவிலு முந்தன் – நல்
இன்ப ரூபம் தனை என் முன்பில் இயங்கச் செய்யுமேன் – அஞ்சலோடு
4. பார்வை பேச்சு கேள்வி சிந்தை யாவினாலுமே – வரும்
பாவ தோஷங்கட்கு என்னைப் பாதுகாரையா – அஞ்சலோடு
5. ஆயனே அடியானுக்கு நாயன் நீரல்லால் – இம்
மாய வாழ்வில் ஒன்றுமில்லை மாய்கை மாய்கையே – அஞ்சலோடு
Anjalodu Nenjurugi Aavaalai vanthean -Yealai
Aarenentradi Aaanalum Aabayam kel Ayya!
1. Sanjalam Thavirka Unthan Thanjame Allall- Ith
Tharaniyil Yaathum Kaanen Thaaragam Neeye – Anjalodu
2. Nithirayil Vikkinathu pukkidamale -Nin
Sitham vaithu ennai ratchitha deva sthothiram – Anjalodu
3. Intru Aadiyaan seiyum vealai yaavilum unthan -Nal
Inba roobam Thanai en munbil eyanga seiyumean – Anjalodu
4.Paarvai pechu kelvi sinthai yaavinaalumae – varum
Paava thosankatku ennai paathukaaraiyya – Anjalodu
5.Aaayanae Adiyaanukku Naayan Neeralaal -Im
Maaya valvil ontrumillai maaikai maaikaiyae – Anjalodu