En Nambikayae Umaku Sthothiram – என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்
உம்மைத்தான் நான் நம்பியிருக்கிறேன்
அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா

நூற்றுக்கு நூறு உம்மை நம்புவேன்
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்
உதவி செய்திடுங்க உயர்த்தி வெச்சிடுங்க

ஆராய்ந்து முடியாத அதிசங்கள் செய்பவரே
அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
இரட்டிப்பான நன்மைகளை தருவேன்னு
சொன்னீரே இன்றைக்கே
தந்திடுங்க இப்பவே தந்திடுங்க

உம்மையல்லாமல் யார் என்னை
உயர்த்தக் கூடும் அற்புதம்
செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்க
ஐசுவரியம் கனமுமே உம்மாலே தான்
வருகிறது ஆளுகை செய்யுங்கப்பா
மேன்மை படுத்துங்கப்பா

Leave a Comment