En Vaanjai Devattu kutti -என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி

1. என் வாஞ்சை தேவாட்டுக்குட்டி,
உம் இரத்தத்தால் சுத்தி செய்யும்
சிந்திப்பேன் தம் காயத்தையே,
நீங்கும் நோவு மரணமும்
2. எந்தன் ஏழை உள்ளத்தை நீர்
சொந்தமாய் கொள்ளும் உமக்கே!
என்றும் தங்கிடும் என்னுள்ளில்
அன்பால் பந்தம் நிலைக்கவே
3. தம் காயத்தில் தஞ்சம் கொண்டோர்
தம் ஜீவன் பெலனும் காண்பார்
தம்மில் ஜீவித்துப் போர் செய்வோர்,
தம்மை யண்டி பாக்கியராவார்
4. வெற்றி வேந்தராம் இயேசுவே,
தாழ்ந்து பணிகிறோம் உம்மை
தந்தோம் எம் உள்ளம் கரங்கள்
தமக்கென் றுழைத்துச் சாவோம்

Leave a Comment