1. கர்த்தரே, தற்காரும்,
ஆசீர்வாதம் தாரும்,
எங்கள் மேல் உம் முகத்தை
வைத்து, வீசும் ஒளியை.
2. எங்களுக்கன்றன்று
சமாதானம் தந்து
கிறிஸ்தைக் காட்டிப் போதிக்கும்
உமதாவியைக் கொடும்.
3. எங்கள் மீட்பரான
இயேசுவின் மேலான
நாமத்துக்கு மகிமை;
ஆமேன், கேட்பீர் ஜெபத்தை.