Meetpa Ummil Anbu Kooruvean – மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்

1. மீட்பா உம்மில் அன்பு கூர்வேன்
நீர் என் சொந்த மாதலால்;
எந்தன் உள்ளம் முற்றும் தாறேன்
நான் உம் சொந்த மாதலால்
பல்லவி
நேச மீட்பா! நேச மீட்பா!
இயேசுவே! நீரே எல்லாம்!
2. சித்தம் காயம் எந்தனுள்ளம்
ஆவியால் நிறைந்திட;
கிருபையாய் ஏற்றுக் கொள்ளும்
என்றும் உம் சொந்தமாக! – நேச
3. வஸ்திரத்தின் ஓரம் தொட்டேன்
பயமின்றி என் கையால்
இரத்த ஊற்றினாலே பெற்றேன்
அருள் நேசர் பலத்தால் – நேச
4. நேச மீட்பா! உந்தன் அன்பு
நாவால் சொல்ல வொண்ணாதே!
முற்றும் சுத்தமாகும் என்று
சொன்ன உடன் ஆயிற்றே! – நேச
5. புது சிருஷ்டி யாகிறேன்!
ஜீவனோ டெழுகிறேன்
ஆத்துமா உயிர் பெற்றதால்
கிறிஸ்தும் நானும் சொந்தமே! – நேச

Leave a Comment