Neeyae Nilai – நீயே நிலை

பல்லவி
நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு
சரணங்கள்
1.தூய அர்ச்சயர்கள் சூழ சீமோன் மாமலையில் ஆளும்
சுந்தரக் கிருபை வாரியே, மைந்தர் கட்கனுசாரியே
சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி
ஜோதி ஆதிநீதி ஓதி சுயவல்லமையில் நரர் திருஉரு என – நீயே
2.நன்மைநிறை வாகரமே ஞானப் பிரபாகரமே
வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே
மகிமை வந்தனமே, அடியார் துதிகள் தந்தனமே, கனமே
வாச நேச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை துதி – நீயே
3.வானும் இகமும் படைத்த, வலுசர்ப்பம் வினை துடைத்த
ஞான நன்மைகள் உடைத்த, நரர்க்குக் கிருபை கிடைத்த
நய கிருபாலி உலகின் பவம் அறுமூலி செங்கோலி
நாடி,நீடி,தேடி,கூடி,நயம் அருள் அரசன் நீ தயவுடன் பரிசினி – நீயே

Leave a Comment