1. பரிசுத்தமாக இயேசண்டை – வந்து
இரத்தத்தால் கழுவப்பட்டாயா?
நம்புகிறாயா? உன் யாவையுந் தந்து
இரத்தத்தால் கழுவப்பட்டாயா?
பல்லவி
இயேசுவின் இரத்தத்தால்
உன் உள்ளம் கழுவப்பட்டதா?
நீதியின் வெண் வஸ்திரம் பெற்றாயா நீ
பூரண இரட்சிப்படைந்தாயா?
2. தினம் உன் நடை மீட்பரைச் சார்ந்ததா?
இரத்தத்தால் கழுவப்பட்டாயா?
கொந்தளிப்பெல்லாம் இப்போ அமர்ந்ததா?
இரத்தத்தால் கழுவப்பட்டாயா? – இயேசுவின்
3. அவரைச் சந்திக்க வெண் ணங்கியுண்டா?
இரத்தத்தால் கழுவப்பட்டதா?
விண்வீடேக உன் உள்ளம் ஆயத்தமா?
இரத்தத்தால் கழுவப்பட்டதா? – இயேசுவின்