1. பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
கேளும் நெஞ்சின் வேண்டலை
தாரும் சமாதானத்தை
அன்புக்கேற்ற உணர்வும்
அன்னியோன்னிய ஐக்கியமும்
ஈந்து ஆசீர்வதியும்
திவ்விய நேசம் ஊற்றிடும்.
2. உந்தன் அடியாரை நீர்
ஒரே மந்தையாக்குவீர்
ஒரே ஆவியும் உண்டே
விசுவாசமும் ஒன்றே
ஒன்றே எங்கள் நம்பிக்கை
ஐக்கியமாக்கி எங்களை
ஆண்டுகொள்ளும் கர்த்தரே
ஏக சிந்தை தாருமே.
3. மீட்டுக்கொண்ட ஆண்டவா
அன்னியோன்னிய காரணா
ஜீவ நேசா தேவரீர்
வேண்டல் கேட்டிரங்குவீர்
பிதா சுதன் ஆவியே
ஏகரான ஸ்வாமியே
உந்தன் திவ்விய ஐக்கியமும்
தந்து ஆட்கொண்டருளும்