1. பிதாவே, மா தயாபரா,
ரட்சிப்பின் ஆதி காரணா,
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பாக மன்னிப்பீயுமேன்.
2. பிதாவின் வார்த்தை மைந்தனே,
தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,
சிம்மாசனமுன் தாழுவேன்
ரட்சணிய அருள் ஈயுமேன்.
3. அநாதி ஆவி, உம்மாலே
மரித்த ஆன்மா உய்யுமே
சிம்மாசனமுன் தாழுவேன்
தெய்வீக ஜீவன் ஈயுமேன்.
4. பிதா குமாரன் ஆவியே,
திரியேகரான ஸ்வாமியே,
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பருள் ஜீவன் ஈயுமேன்.