1. இரட்சிப்பைக் கொண்டு
உச்சிதப் பட்டணம்
பட்சமுடன் செல்லுவோம் – அங்கே
பரலோகப் பங்கை பங்கிட்டுக் கொள்வோம்
பரமனுதவியாலே -இர
2. உலகத்தின் வாழ்வை
பொய்யென்று விட்டு
பரமன் பதத்தைத் தொட்டு – என் ஐயா
பாக்கியம் பெற்றேன்; பாவத்தை விட்டேன்
பரிசுத்தன் பலத்தாலே -இர
3. மறையோனை வெறுத்து
பாவத்தைத் தொடுத்து
மாய வலையிலுட்பட்டு – என் ஐயா
மயங்கித் திரிந்தேன், மருள விழுந்தேன்
மன்னித்துக் கொண்டாரே -இர
4. பாவத்தைச் செய்து
காலத்தைக் கழித்தால்
சாபத்துள்ளாவீரே! – என் ஐயா
பாவத்தின் சம்பளம் மரண மென்றறிந்து
பற்றிடும் ஜீவன் இன்று! -இர
5. இயேசுவின் அழைப்பை
காதினாற் கேட்டும்
கடினமானாலுள்ளம் – பாவி
தப்புவாயோ நீ? தண்டனை அடைவாய்!
தற்பரன் கரத்தாலே -இர