1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு
இரட்சகரின் இடம்
அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்கு
தன குற்றம் நீங்கிடும்
பல்லவி
நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்
2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்தான்;
அவன் போல் நம்பி இயேசுவால்
சுத்தனானேனே நான் – நான்
3. காயத்தில் ஓடும் இரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்;
விஸ்வாசமாய் மா நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான்
4. மரணம் என்னைப் பிரிக்கும்
நாள் பரியந்தமும்
இரட்சிக்கும் மா வல்லமையை
மேன்மையாய்ப் பாடுவேன் – நான்
5. தேவ வீரர் யாவருமே
பாவ மற்றொழுக
அருமை மீட்பா! உம் இரத்தம்
வல்லமை தந்திடும் – நான்