Thozhuvom Paranai Thuuya – தொழுவோம் பரனை தூய

1.தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்
விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி
பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.
2. வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை
எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே
ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை
ஜீவ பாதை காப்பார் உத்தமமாய்.
3. படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும்,
அடையோமே பயம் ஆராதிக்க;
சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும்
அத்தனைப் பக்தியாய் பூஜித்திட.
4. பயம் நடுக்கத்துடன் படைத்திடினும்
தயவாய் ஏற்பார் நம் காணிக்கையே
மாலையின் கண்ணீர்தான், காலையில் களிப்பாம்
மலைவு போம், நிற்கும் நம்பிக்கையே.
5. தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்,
விழுவோம் அவர்முன் மாட்சி போற்றி;
பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

Leave a Comment