வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள் ,
சேனை நாங்கள் ,இயேசுவின் சேனை நாங்கள் .
திரு வசனத்தை எங்கும் திரிந்து சொல்வோம் ,
திரிந்து சொல்வோம் ,அதை அறிந்து சொல்வோம் .
அறிவீன மென்னும் காட்டை அதமாக்குவோம்
அதமாக்குவோம் ;ஞானமதால் தாக்குவோம் .
சிலுவை கொடியைச் சேரத் தேடிப் பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் ,அன்பு கூர்ந்து பிடிப்போம் .
ரட்சண்ய சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் வாசம்.
விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் .
பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம் ,
பாசம் நீக்குவோம் ; ஆசாபாசம் போக்குவோம்
- வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்;
சேனை நாங்கள் இயேசுவின் சேனை நாங்கள் - திருவசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம் – வீராதி - அறிவீனம் முற்றுமாக அதமாக்குவோம்;
அதமாக்குவோம் ஞானமதை ஊட்டுவோம் – வீராதி - சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
தேடிப் பிடிப்போம் அன்பு கூறிப் பிடிப்போம் – வீராதி - இரட்சணியச் சீராவுடன் நீதிக் கவசம்
நீதிக் கவசம் கையாடுவோம் நிசம் – வீராதி - விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்;
மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் – வீராதி - பாவம் பாசம் சோதனைகள் யாவும் ஜெயிப்போம்
யாவும் ஜெயிப்போம் ஆபாசம் போக்குவோம் – வீராதி