1. வேண்டுமே விஸ்வாசம்
நீங்கவே பர்வதம்
ஆண்டவரேசு இரத்தத்தில்
அன்பின் பக்தி தேவை
2. இயேசு தம் தாசர்க்கு
ஈந்த நல் விஸ்வாசம்
மோச உலகத்தை விட்டு
மோட்ச வீடு சேர்க்கும்
3. ஆனந்தமா யென்றும்
அரும் பாரந்தாங்கும்;
வான பிதாவின் கண் கண்டு
வாழ்த்தும் பக்தி தேவை
4. அசையா விஸ்வாசம்
ஆக்கும் இரட்சை நிசம்!
அதுவே மோட்ச நங்கூரம்
ஆடாது அந்நேரம்
5. அன லொளி தரும்
அவ் விஸ்வாசம் தாரும்
தினம் எனக்கது தேவை
தீர்க்கமா யுழைக்க