அவிசுவாசமாய்த் தொய்ந்து
1. அவிசுவாசமாய்த் தொய்ந்து
பாவத்தில் ஏன் நிற்கிறாய்
நம்பு இப்போ,
இரட்சிப்பார் அப்போ!
மனதைத் தா நம்பிக்கையாய்
பல்லவி
இரட்சிக்க வல்லவர் இயேசு,
மீட்க வல்லோர் காக்க வல்லோர்!
இரட்சிக்க வல்லவர் இயேசு,
பாவியை மீட்க வல்லோர்!
2. ஏழை பலவீனன் ஐயோ
பாவம் வெல்லு தென்கிறாய்;
மெய்தான்! ஆனால்
அவரண்டை வந்தால்
மீட்டு உன்னைப் பாதுகாப்பார் – இர
3. அவர் என்னை துக்கத்தில் கண்டு
அன்பாக சொஸ்தம் செய்தார்;
என் இருள் நீக்கி
என்னைக் கைத்தூக்கி,
மெய் வெளிச்சத்தையும் தந்தார் – இர
4. துக்கங்கள் துன்பங்கள் வந்து
சோதனை என்னைச் சூழ்ந்தால்
எப்போதும் இவர்
தற்காத்திடுவார்
எனக்கப்போ பயமில்லை! – இர