அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai

1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?
பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ?
2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;
ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ
3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?
செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ
4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;
வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ
5. ஆசைக்கிசைந்த நேசரின் நாமம் இயேசுகிறிஸ்தென்பதாம்;
காசினியெங்கும் கேட்டறியாத கர்த்தன் திருப்பேராம் – அழ

Leave a Comment