ஒயிலாரே….. ஒயிலா, ஒயிலா…ஒ.. ஃகோய்…
பெத்தலகேம் ஊரினிலே, மாடடையும் குடிலினிலே
மன்னவனாம் இரட்சகன் இயேசு பிறந்தாரையா
மனுக்குலம் மீட்க்கவே பிறந்தாரையா
1. மேய்ப்பர்கள் காட்டினிலே
மந்தயைக் காக்கயிலே
வான்தூதர் நற்செய்தி உறைத்தாரையா
முன்ணணையில் பாலனைக் கண்டாரையா
சாஸ்திரிகள் மூவருமே
வால் நட்சத்திரம் காண்கையிலே
ஆனந்த சந்தோஷம் அடைந்தாரையா
பாலனை தரிசிக்க விரைந்தாரையா
மன்னவன் வரவாலே மீட்பு வந்ததையா
தீர்க்கனின் உறை நிறைவேறித் தீர்ந்ததையா
இந்த நற்செய்திதனை ஊரெங்கும் பாடிச் சொல்வோம்
2. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திலே
மத்தாப்பு கொழுத்தயிலே
எழியவரை நாம் கொஞசம் நினைக்கணுங்க
சந்தோஷம் அவர் நெஞ்சில் வெடிக்கணுங்க
புது வருட பிறப்பினிலே
ஆலயம் போகயிலே
நல்லப் புது தீர்மானம் எடுக்கணுங்க
ஜெபத்துடன் அதை தினம் செய்யணுங்க
தீமை வெறுத்துவிட்டு நன்மை செய்யுங்க
நன்மையை என்றென்றும் பற்றிக்கொள்ளுங்க
வாழ்கின்ற நாளெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வோம்