Bhooloham Ellam Thaayentru Pottra – பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

பூலோகம் எல்லாம் தாயென்று போற்ற

வரம் தந்த மகனே நீ வா
தாயாகி நானும் தாலாட்டு பாட
தவமே நீ தலை சாய்க்க வா

குளிர்கால நிலவே நீ வா – என்றும்
குறையாத அருளே நீ வா
மடி மீது விளையாட வா வா
எந்தன் மார்போடு நீ தூங்க வா வா
இரு விழிகளில் உனதழகினை தாராயோ-
என்
மனு உருவே எனதருகினில் வாராயோ


1.


தித்திக்கும் சொந்தம் நீயானாய்
என்றைக்கும் அன்னை நான் ஆனேன்

நெஞ்சுக்குள் கொஞ்சும் இசையானாய்
கண்ணுக்குள் வண்ண நிலவானாய்
வான்மேகம் கூடி தாலாட்டு பாட
வாய்மையை சொல்லவே வந்தாயோ
மாறாத பாசம் தீராத நேசம்

மானிடர் சுவைத்திட தந்தாயோ


அழகே! இதயம் கவி பாடுதே!
அரும்பே! அகிலம் களிகூறுதே!


இரு விழிகளில் உனதழகினை தாராயோ-
என்
மனு உருவே எனதருகினில் வாராயோ


2.

உள்ளத்தில் வந்து கலந்தாயே
எண்ணத்தில் நீயும் நிறைந்தாயே
மண்மீள நீயும் பிறந்தாயே

மடியில் தத்தி தவழ்ந்தாயே
பூமாலை சூடி பூபாளம் பாடி
பூமகன் உன்னுடன் வாழ்வேனே

காலங்கள் எல்லாம் நீ போகும் பாதை
நானுன்னை நிழலாய் தொடர்வேனே

அழகே! இதயம் கவி பாடுதே!
அரும்பே! அகிலம் களிகூறுதே!

Leave a Comment