Songs List

உம்மாலே நான் ஒரு – Ummale Naan Oru Senaikul

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் மதிலைத் தாண்டிடுவேன் – 2 ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம் 1. எனது விளக்கு எரியச் செய்தீர் இருளை ஒளியாக்கினீர் 2. மான்களைப் போல ஓடச் செய்தீர் உயர அமரச் செய்தீர் 3. பெலத்தால் இடைகட்டி வழியை செவ்வையாக்கி வாழவைத்தவரே 4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை எனது அடைக்கலமே 5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர் எந்நாளும் தாங்கிக் கொண்டீர் 6. கால்கள் வழுவாமல் நடக்கும் […]

உம்மாலே நான் ஒரு – Ummale Naan Oru Senaikul Read More »

கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthave Umathu Koodarathil

கர்த்தாவே உமது கூடாரத்தில் தங்கி வாழ்பவன் யார் குடியிருப்பவன் யார் (2) 1. உத்தமனாய் தினம் நடந்து நீதியிலே நிலை நிற்பவன் மனதார சத்தியத்தையே தினந்தோறும் பேசுபவனே 2. நாவினால் புறங்கூறாமல் தோழனுக்குத் தீங்கு செய்யாமல் நிந்தையான பேச்சுக்களை பேசாமல் இருப்பவனே 3. கர்த்தருக்குப் பயந்தவரை காலமெல்லாம் கனம் செய்பவன் ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும் தவறாமல் இருப்பவனே 4. கைகள் தூய்மை உள்ளவன் இதய நேர்மை உள்ளவன் இரட்சிப்பின் தேவனையே எந்நாளும் தேடுபவனே

கர்த்தாவே உமது கூடாரத்தில் – Karthave Umathu Koodarathil Read More »

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் – Nadanamadi Sthotharipaen

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் அல்லேலூயா 1. காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக – ஐயா 3. ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம் தான் உண்டு – ஐயா 4. அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் – Nadanamadi Sthotharipaen Read More »

தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren

தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் 1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன் ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் 2. கன்மலையே ஆராதிக்கின்றேன் காண்பவரே ஆராதிக்கின்றேன் 3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன் முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன் 4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் எல்லாம் பார்த்துக் கொள்வீர் 5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன் எந்நாளும் வெற்றி தருவீர் 6. யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன் எந்நாளும் சமாதானமே

தேவனே ஆராதிக்கின்றேன் – Devane Aarathikkiren Read More »

பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா 1. உதவி வருகிறார், பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் 2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் 3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் 4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு 5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் 6. உலகில் இருக்கிற

பயப்பட மாட்டேன் நான் -Payapadamaten Naan Read More »

போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar

போதகர் வந்துவிட்டார் உன்னைத் தான் அழைக்கிறார் எழுந்து வா (4) 1. கண்ணீர் கடலில் மூழ்கி கலங்கி தவிக்கிறாயோ கலங்காதே திகையாதே கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே 2. பாவச்சேற்றில் மூழ்கி பயந்து சாகிறாயோ தேவமைந்தன் தேடுகிறார் தேற்றிட அழைக்கிறார் மகனே 3. கல்வாரி சிலுவையைப் பார் கதறும் இயேசுவைப் பார் உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் உன் துக்க சுமந்து கொண்டார் 4. துன்பம் துயரம் உன்னை சோர்வுக்குள் ஆக்கியதோ அன்பர் இயேசு அழைக்கிறார்

போதகர் வந்து விட்டார் -Pothagar Vanthu Vittar Read More »

நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai

நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை எந்நாளும் சந்தோஷமே 1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார் மகனாக மகளாக தெரிந்து கொண்டார் 2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன் இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் 3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன் எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன் 4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் 5. சுகமானேன் சுகமானேன் இயேசுவின் காயங்களால் சுகமானேன் 6. முறியடிப்பேன் முறியடிப்பேன் எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

நான் இயேசுவின் பிள்ளை – Naan Yesuvin Pillai Read More »

மகிமை உமக்கன்றோ – Magimai Umakkandro

மகிமை உமக்கன்றோமாட்சிமை உமக்கன்றோதுதியும் புகழும் ஸ்தோத்திரமும்தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை – என்அன்பர் இயேசுவுக்கே 1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்விடுதலை கொடுத்தீர்இராஜாக்களாக லேவியராகஉமக்கென தெரிந்து கொண்டீர் 2. வழிகாட்டும் தீபம் துணையாளரேதேற்றும் தெய்வமேஅன்பால் பெலத்தால்அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே 3. எப்போதும் இருக்கின்றஇனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவேஉம் நாமம் வாழ்க உம் அரசு வருகஉம் சித்தம் நிறைவேறுக 4. உம் வல்ல செயல்கள்மிகவும் பெரிய அதிசயமன்றோஉம் தூய வழிகள் நேர்மையானசத்திய தீபமன்றோ

மகிமை உமக்கன்றோ – Magimai Umakkandro Read More »

உம்மை நம்பி உந்தன் – Ummai Nambi Unthan

உம்மை நம்பி உந்தன் பாதம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம் ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2 1. கண்ணீரைத் துடைத்து கரங்களைப் பிடித்து காலமெல்லம் காத்துக் கொண்டீர் – என்னை 2. மகனாக மகளாக அப்பா என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தீர் 3. அச்சாரமாய் முத்திரையாய் அபிஷேக வல்லமையை அடிமைக்குத் தந்தீரே 4. குருடர்கள் பார்த்தார்கள் செவிடர்கள் கேட்டார்கள் முடவர்கள் நடந்தார்கள்

உம்மை நம்பி உந்தன் – Ummai Nambi Unthan Read More »

ஆறுதலின் தெய்வமே – Aaruthalin Deivame

ஆறுதலின் தெய்வமே உம்முடைய திருச்சமூகம் எவ்வளவு இன்பமானது 1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர் உண்மையிலே பாக்கியவான்கள் தூய மனதுடன் துதிப்பார்கள் துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென் 2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம் உண்மையிலே பாக்கியவான்கள் ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார் – ஆமென் 3. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம் களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் வல்லமை மேலே வல்லமை கொண்டு சீயோனைக் காண்பார்கள் – ஆமென் 4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட உம்மிடத்தில் ஒரு நாள்

ஆறுதலின் தெய்வமே – Aaruthalin Deivame Read More »

ஒரு தாய் தேற்றுவதுபோல்-Oru Thai Thetruvathu Pol

ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார் கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரே என் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார் ஒரு நாளும் விலகிடார்

ஒரு தாய் தேற்றுவதுபோல்-Oru Thai Thetruvathu Pol Read More »

தெய்வமே இயேசுவே -Deivame Yesuve

தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன் தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம் உமக்காய் இழந்தேனையா உம்மைப் பிரிக்கும் பாவங்களை இனிமேல் வெறுத்தேனையா உம் சித்தம் நிறைவேற்றுவேன் உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேசவேண்டுமென்று கற்றுத் தாருமையா எவ்வழி நடக்க வேண்டுமென்று பாதை காட்டுமையா ஒளியான தீபமே வழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமே உம்மில் மகிழ்ந்திருப்பேன் காரணமின்றி பகைக்கட்டுமே கர்த்தரைத் துதித்திடுவேன் சிலுவை

தெய்வமே இயேசுவே -Deivame Yesuve Read More »