Uncategorized

Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா

பல்லவி சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா. சரணங்கள் 1. பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து, பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். – சரணம்‌ 2. கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க் காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். – சரணம்‌ 3. முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே, மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். – சரணம்‌ 4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு, காவலன் […]

Saranam saranm aanantha satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா Read More »

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள்

1. காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து கணக்கில்லா நிந்தையுற்று முள்ளால் பின்னும் தீய க்ரிடத்தாலே சூடுண்ட திருச்சிரசே முன்னமே, நீயுற்ற மேன்மை எங்கே, கொடும் லச்சை நீ காணக் காரணமேன், ஐயோ மிக நோயடைந்தே வதைந்த உன்பக்கமே நோக்கிப்பணிந்து நின்றேன் 2. மூலோகமும் பணியும் கதிரோன் முகத்தின் திருமேனியே ஏனுந்தனை பூலோகத்தாருமியும் தீழ்ப்பாயிற்று; பொற்புமிகுஞ் சோதியே, தீலோகந் தாங்காதென்றோ வேறுபட்டாய் ஜீவ பரவெளிச்சம் கண்ஜோதியிக் காலமே மா இக்கட்டால் இருள் மூடிக் கலங்கி மங்கினதோ? 3. அன்புள்ள

Kaayam Rathan Kuththugal – காயம் ரத்தங் குத்துகள் Read More »

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்

1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா 2.தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்த தூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா 3.இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய் இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா 4.அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று அறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள் Read More »

Paniya yosirase padiyor – பணியா யோசிரசே படியோர்

1.பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து அணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ 2.நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில் வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும் நெற்றி 3.கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார் சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக் கேண் 4.காணீரோ விழிகாள், கண்ணீரருவிபெருக தோணொரு சாலம் துயர்கண்டழு தோனைக் -காணீ 5.உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை உதடே 6.துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள் நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் -துதி

Paniya yosirase padiyor – பணியா யோசிரசே படியோர் Read More »

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா சுந்தரக் குமாரா சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான – சுய சரணங்கள் 1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே அதையொரு பம்பரம் போலிசைத்தனையே துகில்போலா காயமதை லகுவாய் சமைத்ததிலே ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த – சுய 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும் சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் – சுய 3. நரர் பலர் கூடி

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா Read More »

Karunaa Karanae Paramae – கருணா கரனே பரமே

கருணா கரனே பரமே சுரனே கனிவினை தீர்க்க வந்த தனிமுதல் ஏசுநாதா பரன் ஆதியிலே திருவாய்மையிலே பகுத்து விந்தையினோடு மகத்வ சந்தோடநீடு பரிவுடனே அறுதின மதிலே உயர் பரம் உலகியாவையும் அருளிய நேரமே பாருலகந் தனில் ஓர் மனுடன் தனை ஏவையர் என்றொரு பாவையுடன் செய்து படர்ந்த காவிடை இரண்டு மரந் தர அடர்ந்த ஜீவியம் நன்றறி வென்றொரு பழத்திலே புசியாமல் விலக்கின வழிப் படாது பசாசுட சொற்படி பாவையர் ஆர்ந்தின தீவினையால் நர தாவீது சேயென

Karunaa Karanae Paramae – கருணா கரனே பரமே Read More »

Unnathathirku pararkkku Magimai – உன்னதத்திற்குப் பரற்கு மகிமை

உன்னதத்திற்குப் பரற்கு மகிமை உலகிற் சமாதானம் இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் உண்டாக வான பரன்மகிமை பவத்தால் மறைந்த தாயிருக்கப் பானொளிபோற் சுதனார் பிறந்தார் பாவ இருள் நீக்க பாவத்தினால் புவிக்கும் பார்க்கும் பலத்து நின்ற யுத்தம் தாவீதின் சிற்றூரில் பிறந்தோர் தக அமர்ந்தினரே மானிடனாய் பிறந்த சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு ஈன மானிடர்மேல் பிரியம் இன்றே உண்டாயினதே

Unnathathirku pararkkku Magimai – உன்னதத்திற்குப் பரற்கு மகிமை Read More »

Aar Ivar Aaroo – ஆர் இவர் ஆரோ

ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் ஓர் எளிய கன்னிகையின் பாலர் ஆனாரோ ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி சயம் ஆனவரோ கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல் சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர் தூங்கப்புல் அணையோ சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட கானகக் கோனர் காணவர இவர் கர்த்தர் ஆவாரோ

Aar Ivar Aaroo – ஆர் இவர் ஆரோ Read More »

Paavi Manathurukae – பாவி மனதுருகே

பல்லவி பாவி, மனதுருகே! அனுபல்லவி ஆ[1] வீட்டில் ஏர்[2] காட்டு தேவாட்டுக்குப்-பாவி சரணங்கள் 1. மாது தின்ற கனிவினை போக, மனுடர் வடிவமாக – நம் வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அந்தோ! – பாவி 2. வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட,-இதோ! வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார்.- பாவி 3. விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார், கந்தைத் துணி அணிந்தார்; – இப்படி மெத்தனவ ராகக் கரி சித்துனைப்

Paavi Manathurukae – பாவி மனதுருகே Read More »

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே

நன்றி செலுத்துவாயே என் மனமே நீ நன்றி செலுத்துவாயே. 1.அன்றதம் செய்தபாவம் பொன்று நிமித்தமாக‌ இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே நன்றி 2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டு ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே நன்றி 3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே நன்றி 4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதா சொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே நன்றி 5.உன்னதத் தேவனார் தமக்கே மகிமையுடன் இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக நன்றி 6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால் ஆசீர்வதிப்பதாலே அருமையாக நன்றி

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே Read More »

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே

பணிந்து நடந்து கொண்டாரே பரன் பாலனும் கனிந்து தாய் தந்தையருக்கு அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி – பணி 1.தந்தை தாய் தனை மதித்து அவருடைய‌ தயவின் சித்தத்துக் கமைந்த‌ மைந்தர்கள் உலகினில் வாழ்ந்து இருப்பாரென்று சிந்தை மகிழ்ந்து பரன் செப்பிய மொழிப்படி – பணி 2.தந்தைக் குகந்த வேளையில் அவருடனே விந்தை யுடனே பயின்றார்; நிந்தை யிதுவென்றெண்ணிச் சிந்தைக் கலங்கிடாமல் எந்த விதமும் நரர் தன்னைப் பின்பற்றியேகப் –

Paninthu Nadanthu Kondarae – பணிந்து நடந்து கொண்டாரே Read More »

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த

(I. கேள்வி) 1. தம் ரத்தத்தில் தோய்ந்த அங்கி போர்த்து, மாதர் பின் புலம்ப நடந்து; 2. பாரச் சிலுவையால் சோர்வுறவே, துணையாள் நிற்கின்றான் பாதையே. 3. கூடியே செல்கின்றார் அப்பாதையே; பின்னே தாங்குகின்றான் சீமோனே. 4. குரூசைச் சுமந்தெங்கே செல்லுகின்றார்? முன் தாங்கிச் சுமக்கும் அவர் யார்? (II. மறுமொழி) 5. அவர்பின் செல்லுங்கள் கல்வாரிக்கே, அவர் பராபரன் மைந்தனே! 6. அவரின் நேசரே, நின்று, சற்றே திவ்விய முகம் உற்று பாருமே. 7. சிலுவைச்

Tham Raththathil Thointha – தம் ரத்தத்தில் தோய்ந்த Read More »