மாமரி மகனே மாதவ சுதனே
வாழ்த்துகிறோம்
ஆடிடை குடிலின் ஆதவ விடிவே
போற்றுகிறோம்
மார்கழிக் குளிரின்
மாணிக்கமே
பெத்தலை நகரின்
பரிசுத்தமே
மானுட வடிவே
மாபரனே
பாடியே மகிழ்வோம்
யாவருமே
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெரி மெரி கிறிஸ்மஸ்…
*
கந்தை துணியில் தந்தை மடியில்
விண்ணின் மகனாய் வந்தவனே
நிந்தை ஏற்று சொந்தம் ஆக்க
மண்ணின் மகனாய் வந்தவனே
விண்மீன் வழியைக்
காட்டியதோ
இரவும் குளிரைக்
கூட்டியதோ
மீட்பை ஜனமம்
நீட்டியதோ
உயிரும் கானம்
மீட்டியதோ
இறைவா உம்மைப் பணிகின்றோம்
இதயம் ஒன்றாய் இணைகின்றோம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்…
*
ஏழ்மை வடிவில் மாட்டுத் தொழுவில்
அழகின் உருவாய் வந்தவரே
தாழ்மைக் கோலம் தன்னில் ஏற்று
வாழ்வில் மாற்றம் தந்தவரே
இடையர் வந்தது
தொழுதிடவோ
மூன்று ஞானிகள்
பணிந்திடவோ
முன்னணை உமக்கு
பஞ்சணையோ
முன்னைய வாக்கின்
முன்னுரையோ
வரமே உம்மை தேடுகின்றோம்
வாழ்த்துப் பாடல் பாடுகின்றோம்
ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ்…