மலராக மலர்ந்த என் மன்னவா
மடி மீது உறங்க நீயும் இங்கு வா
மார்கழி நிலவே, என் கண்ணே நீ.. வா
மாசில்லா கருவே, என் உள்ளம் நீ.. வா
உன் பிஞ்சு விரல் மெல்லத் தொட
எந்தன் நெஞ்சம் சிலிர்க்குதே
என் தஞ்சம் என, உன்னை எண்ண
எந்தன் உள்ளம் மயங்குதே!
ஆராரிரோ.. (4)
மண்ணாளும் மாதவனே,
மாட்டுத் தொழுவில் பிறந்தாயோ – 2
சில்லென்ற குளிர் நிலவே,
சிந்திவிடு உந்தன் புன்னகையை
புன்னகை சிந்தும் நிலவே..
பூத்தலத்தில் வந்து தவழ்ந்திடு
சின்ன சின்ன முத்தம் நானும் தர,
செல்லமுதே வருவாயோ..
செல்லமுதே வருவாயோ!
விண்ணாளும் விண்ணவனே,
விடியல் தரவே வந்தாயோ – 2
அன்பென்ற அருள்அமுதை,
அள்ளித் தர என்னில் எழுந்திடு
எழுந்த ஒளிக்கதிரே..
என்னகத்தில் வந்து நிறைந்திடு
எல்லையில்லா உந்தன் அன்பைத் தர..
என்னுயிரே வருவாயோ..
என்னுயிரே வருவாயோ !