Migundha Santhosham Ella Janathukkum song lyrics – மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும்

Migundha Santhosham Ella Janathukkum song lyrics – மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும்

மிகுந்த சந்தோஷம் எல்லா ஜனத்துக்கும்
மேசியா நீர் வந்ததால்
பாரெங்கும் பரவசம்
புவியெங்கும் நற்செய்தி
புனிதரே உன் பிறப்பால் – தெய்வ

மகிமையைக் கண்டு
பணிந்து கொள்கின்றோம் (உம்) இயேசுவே உம்மை சேவிக்கின்றோம்
மேன்மையை கண்டு
தொழுது கொள்கின்றோம் (உம்) இயேசுவே உம்மை போற்றுகின்றோம் (கிறிஸ்து)

  1. சாத்தானின் கிரியைகள் அழிக்கும்படி
    பாதாளம் ஜெயிக்கும்படி
    தேவகுமாரன் வெளிப்பட்டீரே
    மாம்சத்தில் வெளிப்பட்டீரே
    பாவங்கள் சுமந்து தீர்க்கும்படி
    மரணத்தை ஜெயிக்கும்படி
    தேவகுமாரன் வெளிப்பட்டீரே
    மாம்சத்தில் வெளிப்பட்டீரே
    உம்மோடு உன்னதங்களில் உட்கார செய்வதற்கும்
    தகப்பன் வீட்டில் என்னை கொண்டுபோய் சேர்ப்பதற்கும்
    தம்மையே தியாகம் செய்ய
    தரணியில் வந்தீரய்யா
  2. நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு
    நீங்கலாக்கி மீட்டுக் கொள்ள
    நியாயப்பிரமாணத்தின் முடிவாக
    சாபமாகி மரிக்க வந்தீர்/கிறிஸ்துவே இறங்கி வந்தீர்
    புது உடன்படிக்கையினால் (மா)கிருபைகள் ஈந்தருள
    ஒன்றான மெய் தேவனின்
    (ஏக)சுதனாக வந்தீரய்யா
  3. நித்திய மகிழ்ச்சி என் தலைமேல்
    (என்) உள்ளத்தில் ஆனந்தமே
    நீதியின் கிரீடம் சிரசின் மேல்
    (உம்) நீதியால் என் சொந்தமே
    அடிமைத்தனத்தினின்று
    சுவிகார புத்திரராக்கி
    ஆளுகை தந்திடவே
    அவனியில் வந்தீரய்யா