Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே

Thaveethin Kumarane christmas song lyrics – தாவீதின் குமாரனே

தாவீதின் குமாரனே, இயேசு மகா ராஜனே
உம்மை நாங்கள் போற்றி பணிகிறோம்
வாழ்த்தி வணங்குகிறோம்

  1. அதிசயமானவர் நீர் தானே
    ஆலோசனை கர்த்தரும் நீர் தானே
    கர்த்தத்துவத்தை தோளில் உடைய தேவனே
    முடிவில்லா ராஜ்யத்தின் ராஜனே
  2. சமாதான காரணர் நீர் தானே
    சமாதான பிரபுவும் நீர் தானே
    எங்களுக்கு சமாதானம் அருளும்படி
    தண்டனையை ஏற்றவரும் நீர் தானே
  3. பெத்லகேம் ஊரிலே பிறந்தவரே
    நாசரேத் ஊரிலே வளர்ந்தவரே
    இஸ்ரவேலை சுற்றிலும் நடந்தவரே
    (கல்வாரி) சிலுவையிலே மரித்து உயிர்த்தவரே
  4. சாஸ்திரிகள் பணிந்துக் கொண்ட தேவனே
    ஸ்தோத்திர பலிகள் செலுத்தி நாங்கள் பணிகிறோம்
    கிரேக்கர்கள் தேடி வந்த தேவனே
    இந்தியர்கள் நாங்கள் உம்மை தொழுகிறோம்