Thuthikku Paathirar pirantharae song lyrics – துதிக்கு பாத்திரர் பிறந்தாரே
துதிக்கு பாத்திரர் பிறந்தாரே..
துதிகள் செலுத்தி மகிழ்வோமே….
உள்ளம் நிறைந்து மன மகிழ்ந்து
நன்றியோடு பாடிடுவோம்….
பிறந்தார் பிறந்தார் ராஜா பிறந்தார்….
சந்தோஷம் மகிழ்ச்சி பொங்கிடவே…
ஜெனித்தார் இயேசு ஜெனித்தார்
என்றென்றும் ஆனந்தம் ஆனந்தமே..
மரியாள் போல் அதிகாலையில்
தேவனைத் தேடித் துதித்திடுவோம்…
பாதம் அமர்ந்து நல்ல பங்கை..
கிருபையாலே தெரிந்து கொள்வோம்
மாட மாளிகை தேடவில்லை..
மன்னன் தொழுவத்தில் பிறந்தாரே…
மந்தை நடுவில் கடும் குளிரில்
விந்தையாய் இயேசு பிறந்தாரே
பாவ மனிதரை இரட்சிக்கவே..
பாலன் இயேசு பிறந்தாரே….
அன்பு நிறைந்தவர் அதிசயமானவர் ..
இவரைப் போல் வேறு தேவன் இல்லை