Vaanaadhi paran song lyrics – வானாதி பரனொரு நரனுருவானார்
பல்லவி
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
அனுபல்லவி
ஆனார் மகவானார் மகிழ்
வானோர் துதி பாடிடவே
தானாய் தயாபரனார் திரு
சேயாய் புவி அவதரித்தே திரி
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
சொல்லுக்கட்டு
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
சொல்லுக்கட்டு
கந்தை யணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
தந்தோம் உயிர் மாபலியாகிட
வந்தோம் புவி வாழ்ந்திட என்றிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
சொல்லுக்கட்டு
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
சொல்லுக்கட்டு
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் தீம் எனத்
தொந்தோம் என்றாடிப் பண் பாடிட
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
சரணம்
தேவாதி தேவன் முனம்
இனிவருவோமென்றோதி ஆதம்
ஏவாளின் பவம் அறக்
கனிமரி தாய் ஒன்றான சேயாய்
பாவமுள்ள உலகதின்
பாவந் தொலைந்தோடிடவே
ஆவால் புவி மானிடனாகியே
பேயின் தலை சிதையுற மிதித்தவன்
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிந்திட
சொல்லுக்கட்டு
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிந்திட
சுத்தர் துதித்திடவும் முத்தி யளித்திடவும்
சித்த மிகுத் துணையே நத்தி யழைத்திடவும்
சொல்லுக்கட்டு
சுத்தர் துதித்திடவும் முத்தி யளித்திடவும்
சித்த மிகுத் துணையே நத்தி யழைத்திடவும்
வந்தார் இனி வானவரோடு நாம்
தொந்தோ மென்றாடிக் கொண்டாடிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
சொல்லுக்கட்டு
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்ற நம் கர்த்தனுக்கே துதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
சொல்லுக்கட்டு
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரோடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் தீம் எனத்
தொந்தோம் என்றாடிப் பண் பாடிட
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்.