vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே
வான் மீதில் வாழும் தூதர்களே
மண்ணில் வாழும் மாந்தர்கட்காய்
பூலோகம் வந்த இயேசுவையே
போற்றிப்பாடிட வந்தீர்களா
போற்றிப் பாடுங்கள் ராஜாவை
உயர்த்திப் பாடுங்கள்
நம் யேசு பிறந்துவிட்டார்
போற்றிப் பாடுங்கள் இயேசுவை
உயர்த்திப் பாடுங்கள்
சமாதானம் பிறந்துவிட்டார்
1.பரலோகத்தில் சிங்காசனத்தில்
வீற்றாளும் ராஜா இவர் (2)
தாழ்மையாக இப்பூவினில்
நமக்காக வந்துதித்தார் -போற்றிப் பாடுங்கள்
2.நம் வாழ்க்கையில் விளக்கேற்றிட
நம்மையும் வாழ வைத்திட
நம் உயிராக பிறந்தாரே
நம் உள்ளே மலர்ந்தாரே -போற்றிப் பாடுங்கள்