1. தொழுவத்தில் இயேசு பிறந்தார்
அதை மேய்ப்பர்கள் பார்க்க வந்தார்;
தூதர் சொல்லக் கேட்டார்
தேவன் மனிதனானார்
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
பல்லவி
பாவியை மீட்க பாவியை மீட்க
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
தூதர் சொல்லக் கேட்டார்
தேவன் மனிதனானார்
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க
2. ஆவியில் நித்தம் வளர்ந்தார்
அவர் எங்கள் துக்கம் சுமந்தார்
காவினில் ஜெபித்தார்
இரத்தம் வேர்வை விட்டார்
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை
3. பிலாத்தின் நியாய ஸ்தலத்தில்
குருசில் மாளத் தீர்ப்படைந்தார்;
எல்லாம் முடிந்ததென்று
சொல்லி மரித்தார் தொய்ந்து
ஏழைப் பாவி என்னை இரட்சிக்க – பாவியை