நான் நினைப்பதற்கும் – Naan nianipatharkum

நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மிகவும் அதிகமாய்
கிரியை செய்திட வல்லவரே
உமக்கே மகிமை

1.அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை
ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர்
மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் – நான்

2.ஞானம் கேட்டார் சாலமோன் ராஜா
செல்வமும் புகழும் சேர்த்துக் கொடுத்தீர்
மிகவும் உயர்த்தினீர் நிகரில்லா அரசனாய்

3.வாலிபன் சிறையிலே ஏங்கினார் விடுதலை
வந்தது உயர்வு ஆளுநர் பதவி
எகிப்து முழுவதும் ஆட்சி செய்தாரே

4.கூலிக்காரனாய் உணவு தேடி வந்தான்
வீட்டுப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டீரே
ஓடி அணைத்துப் பாடி மகிழ்ந்தீர்

Leave a Comment