ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே-2
போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம்-2

ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே-2
நதியே வற்றாத ஜீவ நதியே-2

வரண்டு போன பாலைவனமாய்
வாழ்ந்து வந்தேனே
போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே-2
என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா-2

நதியே வற்றாத ஜீவ நதியே-2

உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன்
தேடிவந்து ஜீவன் தந்து
எழும்ப செய்தீரே-2

தூய ஆவியை அனுப்பி என்னை
உயிர் அடைய செய்தீர் ஐயா_2

நதியே வற்றாத ஜீவநதியே-4

Leave a Comment