வல்லமையின் ஆவியானவர் -Vallamaiyin Aaviyanavar

வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை – ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்

1. Power ஆவி எனக்குள்ளே
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
அகற்றிவிட்டேன் கசப்புகளை

2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை கன்ட்ரோல் ( control) பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன்நான்

3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன்
மீட்பு பெறும் அனைவருக்கும் -நான்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்

4. உலகத்திற்கு வெளிச்சம் நான்
இந்த ஊரெல்லாம் டார்ச் ( Torch)அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன் – நான்
எப்போதும் சுவை தருவேன்

5. கர்த்தரின் முத்திரை என் மேல் – நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர் – நான்
நிச்சயமாய் மீட்பு பெறுவேன்

6. தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை

7. கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று
நிச்சயமாய் நம்பினதாலே – நான்
நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன் )

Leave a Comment