கசையடி காயங்கள் கடுந்துயர் – Kasaiyadi Kayangal Kadunthuyar
கசையடி காயங்கள், கடுந்துயர் வேதனைகள் – 2
தந்தேனே.. தந்தேனே – தந்தையே மன்னியும் – 2
இயேசையா.. இயேசையா எனக்காய் மரித்தீரே – 2
- பலநாளாய் உறவாடி மகிழ்ந்தவரை காணவில்லை – 2
 பகல் இரவாய் போதனைகள் கேட்டிருந்தும் மனம் மாறவில்லை
 விழித்திருந்து ஜெபிக்கும் நேரத்திலே – உம் வியர்வைகள், இரத்தமாய் மாறினதே
 தனியாளாய், சிலுவையினை, சுமந்தீரே உயர் துறந்தீரே – 2 கசையடி
- மாட்சியினை துறந்தீரே, மனிதரை அன்பு செய்ததாலே – 2
 மதியாத உயிர்களுக்காய் மரச்சிலுவை மரணமேனோ
 “கொல்லும் ” என்று கோஷமிட்டும் – அந்த கொடுமையை மன்னித்தீர்
 வியாகுலத்தாயின் விழிநீரில் கரைந்தீரே அன்பில் கலந்தீரே – 2 கசையடி
Tamil Christian Passion Lenten Songs

