Tamil Christmas Songs

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார்

பல்லவி தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார், சாப சர்ப்பந் தலை சாக மிதித்தார் சரணங்கள் 1. பேய்த் திரளோடே, வாய்த்திரள் பாட, பெத்லகேம் என்னும் பெரும்பதி நாட – தேவ 2. தூயர் கொண்டாட, ஆயர்கள் தேட, தீயன் ஏரோது மனம் மிக வாட – தேவ 3. தின்மைகள் மாற நன்மைகள் ஏற தொன்மறை வாக்கியமே நிறைவேற – தேவ 4. பாவம் இரத்தாம்பரம் போற் சிவப்பாயினும் பாலிலும் வெண்மையாக்குவதற்காய் – தேவ 5. இரட்சண்யக் […]

Deva Thirusuthan Yesu Uthithaar – தேவத் திருச்சுதன் இயேசு உதித்தார் Read More »

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான்

பல்லவி உதித்ததே பாராய் – வெளிச்சந்தான் உலகத்தின் ஒளியாய் அனுபல்லவி உதித்ததே உலகினி லோப்பற்ற பேரொளி, அதிசயப் பிரபையை அற்புதமாய் வீசி சரணங்கள் 1. இதயத்தி லிருண்டு – குளிர் மிகக் கதித்துமே மருண்டு, மதிகெட்டு வழி விட்டு மருளுக்குள்ளகப்பட்டு கதியற்ற பாவிகட்குக் கதிர்விட்டு சுடர் விட்டு – உதி 2. பரனடி மறந்து – தமக்குள் உரிமையைத் துறந்து, மரண இருளில் மயங்கித் திரிவோர்க்கு அருணோதயம் போலனாதிச் சுடரொளி – உதி 3. திரிவினை தீர

Uthithathae Paarai velichanthaan – உதித்ததே பாராய் வெளிச்சந்தான் Read More »

AAVI EN DEVANIL – ஆவி என் தேவனில்

பல்லவி ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறதுஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ சரணம் – 1 அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்; சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையதுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி…. சரணம் – 2 பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாததுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….

AAVI EN DEVANIL – ஆவி என் தேவனில் Read More »

Piranthar Piranthar Iraimagan Piranthar -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் வானவர் நல்வாழ்த்து பாட புவி மாந்தர்கள் நல்வாழ்வு வாழமரியின் மடியில் ஆயிடை குடிலில் மகிமையின் ரூபமாக….. மனுகுலத்தில் மனிதனாக மேசியா தேவன் நீரே மகிமையில் இறங்கினீரே மண்ணிலே தேவ ராஜ்யம் தந்தையின் சித்தம் போலேதேவகுமாரா….. எம்மை ஆளும்…. மனித குமாரா….. எம்மை மீளும் இருளிலே வாழும் மனிதர் ஒளியிலே வந்து சேர பாவங்கள் சாபமெல்லாம் பனியை போல் மாய்ந்து போக உன்னதத்தில்… மகிமையே….. பூமியிலே…. சமாதானமே

Piranthar Piranthar Iraimagan Piranthar -பிறந்தார் பிறந்தார் இறைமகன் பிறந்தார் Read More »

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ

பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ள அன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம் வழி நடத்தும் சாஸ்திரிகள் தானாயெழுந்து வந்து தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்து உன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro Maattakathil PiranthavaroManthai Aayar

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ Read More »

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்

1. தேவன் மனிதனாய் ஆகினார் தீயோர் பிணையாய் பூ மேவினார்; தேவலோகம் களிகூருதே தேவ குமாரனைப் போற்றுதே பல்லவி போற்றுவோம் போற்றுவோம் புண்ணிய நாதன் இயேசுவையே 2. காலம் நிறைவேறினபோது கன்னி கற்பத்தி லுற்பவித்து; தாலம் புரக்கப் பெத்லகேமில் இயேசு பிறந்தார் சந்தோஷமே – போற் 3. கூளிச் சிரசை நசுக்கவும் கூறிய சாப மளிக்கவும் வேதியர் மா மறை ஓதினார், வேதனும் பாலகனாயினார் – போற் 4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது, மேலோக சேனைகள் பாடுது;

Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார் Read More »

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே

1. விசுவாசிகளே! ஜெயக் கெம்பீரரே! வாருமிதோ பெத்லகேமுக்கு; மேலோக ராஜன் பிறந்தார் பாருங்கள்! வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள் பாடி மகிழுங்கள் வான லோகத்தின் வாசிகளே! உன்னதனுக்கு மகிமை பாடுங்கள்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே! இன்றுதித்த பாலனே! இயேசுவே! உமக்கு மகிமை தேவனின் வாக்கு தோன்றிற்று மாம்சத்தில்; வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை

Visuvaasikalae Jeya kembeerarae -விசுவாசிகளே ஜெயக் கெம்பீரரே Read More »

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

பல்லவி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டுஇத் சான்டாக்லௌஸ் பாட்டுடிங்டிங் டிங்டாங் பெல்ஸ்இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்மெர்ரி மெர்ரி மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் தான் சரணம் – 1 அன்னை வானம் விட்டு இந்த மண்ணில் வந்தபுது ரோஜா புது ரோஜா மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்றமகா ராஜா மகா ராஜா மரியின் தாலாட்டு தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டுமேய்ப்பர்கள் தாலாட்டு மூன்று மேதைகள் தாலாட்டு சரணம் – 2 மனிதர்

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு Read More »

Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே

வார்த்தை மாம்சம் ஆனாரே – தீர்க்கன் வார்த்தை நிறைவேறிற்றே வான தூதர்கள் வாழ்த்துரைக்க வானவர் வையகம் வந்தாரே 1. பாவத்தை போக்கிடும் பகலவனே பணிந்தோரின் ஆவியை உயிர்ப்பிக்க – நொறுங்கி பணிந்த ஆத்மாவில் வாழ்ந்திட பாலனாய் பாரிலே பிறந்தாரே 2. நீதியை நியாயத்தை நிலைப்படுத்த நீங்கிடா கறைகள் நீக்கிடவே – தாழ்மையின் நிலையை தோழியே சுமக்க நித்திய இராஜனாய் உதித்தாரே 3. ஆதியும் அந்தமும் ஆனவரே அனைவரும் நித்திய வாழ்வடைய – ஏழ்மையின் அடிமை ரூபமே எடுத்தார்

Vaarthai Maamsam Aaanaarae வார்த்தை மாம்சம் ஆனாரே Read More »

Vinthai Meetpar Ninthai Neeka – விந்தை மீட்பர் நிந்தை நீக்க

விந்தை மீட்பர் நிந்தை நீக்க கந்தை அணிந்து வந்தார் பாரில் மந்தை ஆயர் சாஸ்திரி மூவர் மகிழ்ந்து பணிந்தார் பாரீர் செல்வோம், செல்வோம் நாமும் செல்வோம் பாவியை மீட்க வந்த பாலனை பணிய செல்வோம், செல்வோம், செல்வோம் 1. ஓய்ந்திடாது போற்றும் பரம சேனை ஒய்யாரமாய் மீட்டும் இசைவேளை ஒப்பில்லா அந்த இனிய இசையில் ஒன்றிட நாமும் செல்வோமே 2. ஆர்ப்பரிக்கும் அந்த வானோர் கூட்டம் ஆரவாரம் விண்ணை பிளந்திடுமே ஆனந்தம் மிக்க தொனியில் திளைக்க ஆர்வமாய்

Vinthai Meetpar Ninthai Neeka – விந்தை மீட்பர் நிந்தை நீக்க Read More »

Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே

இரட்சகர் பிறந்தாரே!தாவீதின் ஊரினிலே!இயேசு என் உள்ளில் வந்தாரேகேளுங்கள் மானிடரே சரணம் 1. பாரின் பாவம் போக்க இயேசுபாரில் பாலன் ஆனார்-2இயேசுவின் அன்பைப் பாருங்களேஇயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே) 2. ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவைஏழை மேய்ப்பர் கண்டார்-2உண்மையில் நம்மை நேசித்தாரேதன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே)

Ratchakar Pirantharae – ரட்சகர் பிறந்தாரே Read More »

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுதேவ பாலன் இயேசுகண்ணுரங்கவே வீசுகாற்றே மெல்ல நீ வீசுஆரீரராரோ. ஆரீரராரோதூங்கு பாலா தூங்கு நீ – 2 1. வண்ண மாளிகை துறந்ததேன்சின்ன பாலனாய் பிறந்ததேன்மண்ணோரின் பாவம் தீர்க்கின்ற தாகம் மன்னவர் உள்ளம் வந்ததாலோ – 2 – தென்றல் காற்றே 2. தியாக தீபமே பாலகாதூங்கு மாமரி மடிதனில்விண்மேகத்தோடு விளையாடும் நிலவேவிண்ணவர் தூங்க வந்திடாயோ – 2 – தென்றல் காற்றே

THENTRAL KAATRE VEESU – தென்றல் காற்றே வீசு Read More »