Uncategorized

Yesuvae Nee Thaalnthoraana – இயேசுவே நீர் தாழ்ந்தோரான

1. இயேசுவே, நீர் தாழ்ந்தோரான நாட்களில் கும்போடே நீர், என்னால் நோயைத் தீர்ப்பதான சத்து பாய்ந்தது என்றீர். இப்போதுன்னதத்தில் ஆளும் இராஜாவான நீர், இந்நாளும் சக்தியை என்பேரிலும் பாயப்பண்ணியருளும். 2.உமக்கதிகாரம் யாவும் தரப்பட்டிருக்குதே; தேவரீரை எந்த நாவும் கர்த்தர் என்கவேண்டுமே, யாவும் உமக்குப் பணியும் பெருமை எல்லாம் அழியும், உம்மால் கடைசியிலே சாவும் வெல்லப்படுமே. 3.ஆகையாலே தேவையான மீட்பெப்போதும் உம்மாலாம்; இதற்கு நீர் செய்ததான அற்புதங்கள் சாட்சியாம்; ஏனென்றால் அவரவர்க்கு அநுகூலராவதற்கு மனிதரிடத்திலே தயவாக வந்தீரே. 4.ஆ, […]

Yesuvae Nee Thaalnthoraana – இயேசுவே நீர் தாழ்ந்தோரான Read More »

En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே

என் ரக்ஷகா,நீர் என்னிலே மென்மேலும் விளங்கும் பொல்லாத சிந்தை நீங்கவே சகாயம் புரியும் என் பெலவீனம் தாங்குவீர் மா வல்ல கர்த்தரால் சாவிருள் யாவும் நீக்குவீர் மெய் ஜீவன் ஜோதியால் துராசாபாசம் நீங்கிடும் உந்தன் பிரகாசத்தால் சுத்தாங்க குணம் பிறக்கும் நல்லாவி அருளால் மாசற்ற திவ்விய சாயலை உண்டாக்கியருளும் என்னில் தெய்வீக மகிமை மென்மேலும் காண்பியும் சந்தோஷிப்பித்துத் தாங்குவீர் ஒப்பற்ற பலத்தால் என் நெஞ்சில் அனல் மூட்டுவீர் பேரன்பின் ஸ்வாலையாம் நீர் பெருக, நான் சிறுக நீர்

En Ratchaka Neer Ennilae – என் ரக்ஷகா நீர் என்னிலே Read More »

Enthan Aathma Neasare – எந்தன் ஆத்ம நேசரே

1. எந்தன் ஆத்ம நேசரே வெள்ளம் போன்ற துன்பத்தில் தாசன் திக்கில்லாமலே தடுமாறிப் போகையில் தஞ்சம் தந்து இயேசுவே திவ்விய மார்பில் காருமேன் அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன். 2. வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன் கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன் நீரே எந்தன் நம்பிக்கை நீர் சகாயம் செய்குவீர் ஏதுமற்ற ஏழையை செட்டையாலே மூடுவீர் 3. குறை யாவும் நீக்கிட நாதா நீர் சம்பூரணர் திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா

Enthan Aathma Neasare – எந்தன் ஆத்ம நேசரே Read More »

Karthavae ummai thotharipean -கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன்

1. கர்த்தாவே, உம்மைத் தோத்தரிப்பேன், நீர் ஒருவர் பராபரனாமே, நான் உம்மையே நமஸ்கரிப்பேன். என் வேண்டுதல் உம்மண்டை ஏறவே; நான் இயேசுவை முன்னிட்டுக் கூப்பிட நீர் உமதாவியைத் தந்தருள. 2. நான் இயேசு நாமத்தில் மன்றாட அவரண்டைக் கடியேனை இழும்; நான் மண்ணை அல்ல விண்ணை நாட தேவாவி என்னைப் போதிவிக்கவும், நான் உமதன்பை ஆத்துமாத்திலே ருசித்தும்மைத் துதிக்க, கர்த்தரே. 3. இத்தயவை என் மேலே வையும், அப்போ நான் பாடுங்கீதம் உத்தமம், அப்போது இன்பமாய் இசையும்,

Karthavae ummai thotharipean -கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன் Read More »

Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என்

1.ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்; தெய்வாவீ, லோக நேசத்தை என்னை விட்டகற்றும். 2.பூலோக சிந்தையை வெறுத்துத் தள்ளுவேன்; மேலான நித்திய இன்பத்தை நான் தேட ஏவுமேன். 3.எனக்குத் துணையாய் என் பக்கத்தில் இரும்; நான் நிலைநிற்கும்படியாய் கிருபை அளியும். 4.தெய்வன்பின் பாசத்தால் கட்டுண்டு, என்றைக்கும் உம்மை என் முழு மனதால் பின்பற்றச்செய்திடும்.

Jebathin Aavalai En – ஜெபத்தின் ஆவலை என் Read More »

Thayaparaa ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின்

1.தயாபரா எல்லா நல்லீவின் ஊற்றும் நீரே உண்டானதை எல்லாம் அளித்தோர் தேவரீரே என் தேகம் ஆவிக்கும் என் மனச்சாட்சிக்கும் சீராயிருக்கிற ஆரோக்கியம் கொடும். 2.என் நிலைமையிலே நீர் எனக்குக் கற்பித்து கொடுத்த வேலையை கருத்தாய் நான் முடித்து நான் தக்க வேளையில் ஒவ்வொன்றைச் செய்யவும் என் செய்கை வாய்க்கவும் சகாயமாயிரும் 3.எப்போதும் ஏற்றதை நான் வசனிப்பேனாக வீண் பேச்சென் நாவிலே வராதிருப்பதாக என் உத்தியோகத்தில் நான் பேசவேண்டிய சொல் விசனமில்லா பலத்தைக் காண்பிக்க 4.என் சாவை கிறிஸ்துவின்

Thayaparaa ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின் Read More »

Nirappum Ennai Thuthiyaal – நிரப்பும் என்னைத் துதியால்

1. நிரப்பும் என்னைத் துதியால் முற்றாகக் கர்த்தரே என் தேகம் மனம் ஆன்மாவும் உம்மையே கூறவே 2. துதிக்கும் நாவும் உள்ளமும் போதாதென் ஸ்வாமியே என் வாழ்க்கை முற்றும் யாவுமாய் துதியதாகவே. 3. சாமானிய சம்பவங்களும் என் போக்கும் வரத்தும் மா அற்ப செய்கை வேலையும் துதியதாகவும். 4. நிரப்பும் என்னை முற்றுமாய் சமூலம் போற்றவும் உம்மை உம் அன்பை ஏழையேன் துதித்திடச் செய்யும். 5. பெறுவீரே நீர் மகிமை என்னாலும் என்னிலும் இம்மையிலே துடங்குவேன் சதா

Nirappum Ennai Thuthiyaal – நிரப்பும் என்னைத் துதியால் Read More »

Pithavae balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும்

1.பிதாவே பலம் ஈந்திடும் என் வாழ்க்கை கஷ்டமாயினும் மெய் ஊற்றத் தோடு பாடவும் உம் சித்தமே 2.என் கோழை நெஞ்சைத் தேற்றிடும் எச்சக்தி சார்பு சாயினும் உம் அன்பு வன்மை மேற்கொள்ளும் உம் சித்தமே. 3.பணிவாய் உம்மைப் பற்றுவேன் கதவாய் சேவை ஆற்றுவேன் எவ்வேலை தன்னில் சாற்றுவேன் உம் சித்தமே. 4.நீர் ஏவி பாதுகாத்திட உம் ஞானம் பாதை காட்டிட கூடும் எச்செய்கை ஆற்றிட உம் சித்தமே. 5.நான் அல்ல நீர்தாம் என்றுமே உம் சர்வ சக்தி

Pithavae balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும் Read More »

Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே

1.பெந்தகொஸ்தின் ஆவியே உம்மால் போதிக்கப்பட்டே கேட்போம் உன்னத ஈவே தூய மெய்யன்பே. 2.அன்பு யாவும் சகிக்கும் தீதெண்ணாது சாந்தமும் அதுவெல்லும் சாவையும் அன்பை ஈயுமேன். 3.போதனையும் ஓய்ந்திடும் பூரண அறிவிலும் அன்பே என்றும் நிலைக்கும் அன்பே ஈயுமேன் 4.காட்சியால் விஸ்வாசமும் பூரிப்பால் நம்பிக்கையும் ஓயும்! என்றும் ஒளிரும் ஆன்பே ஈயுமேன். 5.அன்பு விசுவாசமும் நம்பிக்கை இம்மூன்றிலுமு; ஒப்பற்ற மேலானதும் அன்பே ஈயுமேன் 6.தூய நேச ஆவியே உம்மைப்போற்றும் தாசர்க்கே எங்கள் பேரில் அமர்ந்தே அன்பே ஈயுமேன்.

Penthekosthin Aaviyae – பெந்தகொஸ்தின் ஆவியே Read More »

Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும்

1. லௌகீக இன்பம் மேன்மையும் இப்பரதேசிக்கு வேண்டாம்; பரம நன்மை செல்வமும் இங்கில்லை, யாவும் மாயையாம்! பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 2. லௌகீக வாழ்வு ஒழியும்; சரீரம் அழகற்றுப்போம்; நரர் கைவேலை அழியும்; இவ்வுலகமும் வெந்துபோம்; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 3. ஆனாலும் இயேசு ராஜியம் அழிந்து போகமாட்டாதே; மா நீதியாம் சிங்காசனம் விழாமல் என்றும் நிற்குமே; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன். 4. நான் இங்கே தங்கும் நாள்

Logeeka Inbam Maenmaiyum – லௌகீக இன்பம் மேன்மையும் Read More »

Arul Niranthavar Poorana Ratchakar – அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர்

1. அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் தேவரீரே ஜெபத்தைக் கேட்கவும் பாவத்தை நீக்கவும் பரத்தில் சேர்க்கவும் வல்லவரே. 2. சோரும் என் நெஞ்சுக்கு பேரருள் பொழிந்து பெலன் கொடும். ஆ! எனக்காகவே மரித்தீர், இயேசுவே; என் அன்பின் ஸ்வாலையே ஓங்கச் செய்யும். 3. பூமியில் துக்கமும் சஞ்சலம் கஸ்தியும் வருகினும் இரவில் ஒளியும் சலிப்பில் களிப்பும் துன்பத்தில் இன்பமும் அளித்திடும். 4. மரிக்கும் காலத்தில் கலக்கம் நேரிடில், சகாயரே, ன்னைக் கைதூக்கவும் ஆறுதல் செய்யவும் மோட்சத்தில் சேர்க்கவும்

Arul Niranthavar Poorana Ratchakar – அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் Read More »

Karthaavin Arputha seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை

கர்த்தாவின் அற்புதச் செய்கை புத்திக்கெட்டாததாம் பொங்கு கடல் கடுங்காற்றை அடக்கி ஆள்வோராம் தம் வல்ல ஞான நோக்கத்தை மா ஆழமாகவே மறைத்து வைத்தும், தம் வேளை முடியச் செய்வாரே திகில் அடைந்த தாசரே மெய் வீரம் கொண்டிடும் மின் இடியாய்க் கார் மேகமே விண்மாரி சொரியும் உம் அற்ப புத்தி தள்ளிடும் நம்பிக்கை கொள்வீரே கோபமுள்ளேராய்த் தோன்றினும் உருக்க அன்பரே மூடர் நம்பிக்கையின்றியே விண்ஞானம் உணரார் தெய்வத்தின் ஞானம் தெய்வமே வெளிப்படுத்துவார்

Karthaavin Arputha seikai – கர்த்தாவின் அற்புதச் செய்கை Read More »