Uncategorized

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை

1.பிதாவே, மெய் விவாகத்தைக் கற்பித்துப் காத்து வந்தீர், நீர் அதினால் மனிதரை இணைத்து, வாழ்வைத் தந்தீர். அதந்கெப்போதுங் கனமும் மிகுந்த ஆசீர்வாதமும் நீர்தாமே வரப்பண்ணும். 2.நன்னாளிலுந் துன்னாளிலும் ஒரே நெஞ்சை அளியும், நீர் எங்கள் இருவரையும் உம்மண்டை நடப்பியும் கர்த்தா உம்மைமுள்ளிட்டெதை நன்றாக வாய்க்கப் பண்ணும். 3.அடியார் பார்க்கும் வேலையை ஆசீர்வதித்து வாரும். நீர் உம்முடைய தயவை அடியாரக்குக் காரும். முகத்தின் வேர்வையோடப்போ சாப்பிடும் அப்பத்திற்கல்லோ நீரே நல்ருசி ஈவீர். 4.நீரே ஆசீர்வதித்கையில், தடுக்கவே கூடாது. அப்போதெண்ணெய்கலயத்தில் […]

Pithavae Mei Vivaakathai – பிதாவே மெய் விவாகத்தை Read More »

Mei Anbarae – மெய் அன்பரே

மெய் அன்பரே, உம் மா அன்பை உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர் பூலோக பாக்கியத்தால் எம்மை மேலோக சிந்தையாக்குவீர் உம் ஆவியால் எம் உள்ளத்தில் உந்தன் மா நோக்கம் காட்டுவீர் உம் நோக்கம் பூர்த்தியாகிட எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர் மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி எ.ய்துவார் உன்னத நிலை பேரின்ப பேறு ஆன்மாவில் பாரினில் மேலாம் வாழ்க்கையை தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும் தம்பதிகள் இவருக்கே நித்தம் புத்தன்பு இன்பமும் சித்தமே வைத்து ஈயுமே நற்குணம் யாவும் இவரில்

Mei Anbarae – மெய் அன்பரே Read More »

Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம்

1. ஆண்டவா! மேலோகில் உம் அன்பின் ஜோதி ஸ்தலமும், பூவில் ஆலயமுமே பக்தர்க்கு மா இன்பமே தாசர் சபை சேர்ந்திட, நிறைவாம் அருள் பெற, ஜோதி காட்சி காணவும், ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும். 2. பட்சிகள் உம் பீடமே சுற்றித் தங்கிப் பாடுமே பாடுவாரே பக்தரும் திவ்விய மார்பில் தங்கியும் புறாதான் பேழை நீங்கியே மீண்டும் வந்தாற்போலவே, ஆற்றல் காணா நின் பக்தர் ஆறிப் பாதம் தரிப்பர். 3. அழுகையின் பள்ளத்தில் ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில் ஜீவ ஊற்றுப்

Aandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம் Read More »

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும்

1. கர்த்தா, நீர் வசிக்கும் ஸ்தலத்தை நேசிப்போம்; பாரின்பம் யாவிலும் உம் வீட்டை வாஞ்சிப்போம். 2. உம் ஜெப வீட்டினில் அடியார் கூட, நீர் பிரசன்னமாகியே உம் மந்தை வாழ்த்துவீர். 3. மெய் ஞானஸ்நானத்தின் ஸ்தானத்தை நேசிப்போம் விண் புறாவாம் ஆவியால் பேரருள் பெறுவோம் 4. மா தூய பந்தியாம் உம் பீடம் நேசிப்போம் விஸ்வாசத்தால் அதில் சமுகம் பணிவோம். 5. மெய் ஜீவனுள்ளதாம் உம் வார்த்தை நேசிப்போம் சந்தோஷம், ஆறுதல் அதில் கண்டடைவோம். 6. உன்

Karthaa Neer Vasikum – கர்த்தா நீர் வசிக்கும் Read More »

Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே

1. மூலைக் கல் கிறிஸ்துவே அவர்மேல் கட்டுவோம்; அவர் மெய் பக்தரே விண்ணில் வசிப்போராம் அவரின் அன்பை நம்புவோம் தயை பேரின்பம் பெறுவோம். 2. எம் ஸ்தோத்ரப் பாடலால் ஆலயம் முழங்கும் ஏறிடும் எம் நாவால் திரியேகர் துதியும் மா நாமம் மிக்கப் போற்றுவோம் ஆனந்தம் ஆர்க்கப் பாடுவோம். 3. கிருபாகரா, இங்கே தங்கியே கேட்டிடும், மா ஊக்க ஜெபமே பக்தியாம் வேண்டலும் வணங்கும் அனைவோருமே பெற்றிட ஆசி மாரியே. 4. வேண்டும் விண் கிருபை அடியார்

Moolaikal Kirsithuvae – மூலைக் கல் கிறிஸ்துவே Read More »

Kartha Um Maatchi Karathaal – கர்த்தா உம் மாட்சி கரத்தால்

1. கர்த்தா உம் மாட்சி கரத்தால் நோய் சாவும் நீங்கிற்றே சுத்தாங்க சுகம் ஜீவனும் உம் வார்த்தை நல்கிற்றே அந்தகர் ஊமை செவிடர் நிர்ப்பந்தராம் குஷ்டர், நொந்த பல்வேறு ரோகஸ்தர் நாடோறும் வந்தனர். 2. மா வல்ல கரம் தொடவே ஆரோக்கியம் பெற்றனர் பார்வை நற்செவி பேச்சுமே பெற்றே திரும்பினர்; மா வல்ல நாதா, இன்றுமே மறுகும் ரோகியும் சாவோரும் தங்கும் சாலையில் ஆரோக்கியம் அளியும். 3. ஆரோக்கிய ஜீவ நாதரே நீரே எம் மீட்பராய் ஆரோக்கியம்

Kartha Um Maatchi Karathaal – கர்த்தா உம் மாட்சி கரத்தால் Read More »

Naathaa jeevan Sugam thantheer – நாதா ஜீவன் சுகம் தந்தீர்

1. நாதா, ஜீவன் சுகம் தந்தீர் நாடி வந்த மாந்தர்க்கு இன்றும் ஜீவன் சுகம் ஈவீர் நோயால் வாடுவோருக்கு, நாதா, உம்மைப் பணிவோம் பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம். 2. ஆவலாய் சிகிச்சை நாடி சாவோர் பிணியாளிகள் வைத்தியர் சகாயர் தேடி வருவாரே ஏழைகள் நாதா, சுகம் அருள்வீர், பாதம் வீழ்ந்தோர் ரட்சிப்பீர். 3. ஐயா! தொண்டர் ஆணும் பெண்ணும், கையால் உள்ளத்தாலுமே பாசம் அநுதாபத்தோடும் பாரம் நீக்கச் செய்யுமே; நாதா, ஜெபம் படைப்போம், பாதம் வீழ்ந்து கெஞ்சுவோம்.

Naathaa jeevan Sugam thantheer – நாதா ஜீவன் சுகம் தந்தீர் Read More »

Perugu perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்

1. பெருகு, பெருகு, சீயோனே சன்மார்க்கத்தில்; முற்சிநேகத்தை விடாதே; கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்; அசதிக் குணம் ஆகாதே; நீ இடுக்க வாசற்குட்பட்டு பெருகு, பெருகு. 2. உத்தரி, உத்தரி சீயோனே, இக்கட்டுக்கு நீ அஞ்சாமல், சாவுமட்டும் நல்ல உண்மையாயிரு; ஜீவ கிரீடம் லக்காகட்டும் நிந்தை யாவையும் அநுபவி, உத்தரி, உத்தரி. 3. உன்னைக் கா, உன்னைக் கா, சீயோனே, நீ உலகின் வாழ்வை மேன்மையை எண்ணாதே நீ பழைய சர்ப்பத்தின் ஆளுகைக்குக் கீழாகாதே; லோக இன்பத்தை வெறுப்பாய்ப்

Perugu perugu Seeyonae – பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் Read More »

Mealoka vettri sabayum – மேலோக வெற்றி சபையும்

மேலோக வெற்றி சபையும் பூலோக யுத்த சபையும் ஒன்றாகக் கூடி சுதனை துதித்துப் பாடும் கீர்த்தனை. ராஜாக்களுக்கு ராஜாவே, கிருபாதார பலியே, மரித்தெழுந்த தேவரீர் செங்கோல் செலுத்தி ஆளுவீர். பூமியில் உள்ள தேசத்தோர், பற்பல பாஷை பேசுவோர் எல்லாரையும் ஒன்றாகவே இழுத்துக்கொள்வேன் என்றீரே. கிரேக்கர், யூதர், தீவார்கள்; ராஜாக்கள், குடி ஜனங்கள், கற்றோர், கல்லாதோர், யாவரும் வந்தும்மைப் போற்றச் செய்திடும். பொன், வெள்ளி, முத்து, ரத்னமும் எல்லாப் பூலோக மேன்மையும் காணிக்கையாக உமக்கே செலுத்தப்படும் இயேசுவே.

Mealoka vettri sabayum – மேலோக வெற்றி சபையும் Read More »

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே

1.அதோ! ஓர் ஜீவ வாசலே! அவ்வாசலில் ஓர் ஜோதி எப்போதும் வீசுகின்றதே, மங்காத அருள்ஜோதி, ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே! அவ்வாசல் திறவுண்டதே! பாரேன்! பாரேன்! பார்! திறவுண்டதே. 2. அவ்வாசலுள் பிரவேசிப்போர் கண்டடைவார் மெய்வாழ்வும் கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர் எத்தேச ஜாதியாரும். 3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம் அவ்வாசலில் உட்செல்வோம் எப்பாவம் துன்பும் நீங்கிப்போம் கர்த்தாவைத் துதிசெய்வோம்.

Atho oor Jeeva vaasalae – அதோ ஓர் ஜீவ வாசலே Read More »

Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக

1.எழும்பெழும்பு நவமாக, பூர்வீக சாட்சிகளின் ஆவியே; நோகர் சாமக்காரராக மதிலில் நின்றோயாமல் கூப்பிட்டே, பேயை எதித்த்தெந்த நாட்டாரையும் அழைத்துச் சுவிசேஷம் கூறவும். 2.ஆ, உமதக்கினி எரிந்து, எத்தேமும் பரம்பச் செய்யுமேன். கர்த்தாவே, கிருபை புரிந்து, நல் வேலையாட்களை அனுப்புமேன். இதோ, உமதறுப்பு, கர்த்தரே, விஸ்தாரமாம், அறுப்போர் கொஞ்சமே. 3.உமது மைந்தன் தெளிவாக இவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரே. அத்தாலே எங்கும் தாழ்மையாக உமது பிள்ளைகள் உம்மிடமே சேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும் மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும். 4.உமது மைந்தனே கற்பித்த

Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக Read More »

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார்

1. கர்த்தர் தம் கிரியை செய்கிறார் ஆண்டாண்டுகள் தோறுமே கர்த்தர் தம் கிரியை செய்கிறார் அவர் காலம் வருமே; ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம் அவரின் ராஜ்யமே ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும் ஆழி ஜலம் போலவே 2. கர்த்தரின் செய்தி கேட்பராம் பூமி எங்கும் உள்ளோரே பக்தர் அச்செய்தி கூறுவார் அவர் வாக்கை கைக்கொண்டே கண்டமே, தீவே, கேட்பீரே, ஆம், அவரின் வார்த்தையே ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும் ஆழி ஜலம் போலவே 3. கர்த்தரின்

Karthar Tham Kiriyai seikiraar – கர்த்தர் தம் கிரியை செய்கிறார் Read More »