Uncategorized

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும்

1. கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் அரண் பலமுமாமே; உண்டாம் இக்கட்டனைத்தையும் போக்குவார் அவர்தாமே பொல்லாங்கனின் சினம் இப்போது மா விஷம் துஷ்டமும் சூதையும் அணிந்து உறுமும் – நிகர் புவியில் இல்லை. 2. எதற்கு நாங்கள் வல்லவர்? இந்நீசர் சக்தியற்றோர்; எங்களுக்காய் வேறொருவர் போர் செய்வதற்கேற்பட்டோர் ஆர்? இயேசு கிறிஸ்துதான்; ஆ இந்தப் பலவான் ஆம் எங்கள் ரட்சகர்; சேனாபதி அவர் ஜெயிப்பார் அவர்தாமே. 3. விழுங்க வரும் பேய்களால் புவி நிரம்பினாலும் பயப்படோம்; கர்த்தாவினால் எதிர்த்து […]

Karthar Thaam Engal Thurkamaum – கர்த்தர்தாம் எங்கள் துர்க்கமும் Read More »

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே

1. கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்; சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள் சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது. 2. எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துங்கள் அவரே யாவர்க்கும் ரட்சகர் என்னுங்கள் சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது. 3. மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது. 4. பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே உங்களை ரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு

Karthavin Thaasarae – கர்த்தாவின் தாசரே Read More »

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட

1. காரிருளால் மூடப்பட்ட பர்வதங்கள் மேலே பார் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஜோதி தோன்றச் செய்கிறார் அதற்காக நெஞ்சமே, மகிழ்ச்சி கொள். 2. அதைத் தேசத்தார் எல்லாரும் காணச் செய்யும் கர்த்தரே அந்தகாரமுள்ள யாரும் அதால் சீராவார்களே; நீர் சகித்த சாவின் பலன் அதுவே. 3. இப்போ லட்ச லட்சமான பேர்கள் அருள் பெற்றது உம்முடைய உண்மையான அன்பினாலே ஆயிற்று; அதற்காக உமக்கே மா ஸ்தோத்திரம்.

Kaarirulaal Moodapatta – காரிருளால் மூடப்பட்ட Read More »

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே

1. கிறிஸ்து எம் ராயரே, வந்தாளுகை செய்யும் வெம் பாவம் நீங்கவே செங்கோலைச் செலுத்தும். 2. விரோதம் நீங்கியே விண்போல மண்ணிலும் தூய்மையும் அன்புமே எப்போது செழிக்கும்? 3. உம் வாக்குக்கேற்றதாய் வீண் போரும் பகையும் சீர் கேடும் முற்றுமாய் எப்போது ஒழியும்? 4. எழும்பும், கர்த்தாவே, வல்லராய் வாருமேன், தாசர் தவித்தோமே, வந்தாற்றித் தேற்றுமேன். 5. உம் மார்க்கம் நாமமும் பலர் பழிக்கின்றார் துர் கிரியை பலரும் நாணாமல் செய்கின்றார். 6. தேசங்கள் யாவிலும் மெய்

Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே Read More »

Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க

1. திருச்சபை காத்திருக்க எந்நாள், நாதா, வருவீர்? எந்நாள் துக்க ரா முடிய பகல் விடியச் செய்வீர்? நெல் விளைந்து வாடிப்போக அறுப்போரும் குறைந்தார்; சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள கிறிஸ்து வீணாயோ மாண்டார்? 2. சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி கோடாகோடி கேளாரே யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி? நாதா, வார்த்தை ஈயுமே; வார்த்தை ஈயும் சுவிசேஷ தொனி எங்கும் ஒலித்தும், எல்லாத் தேசத்தாரும் திவ்விய மீட்பைக் கேட்க செய்திடும் 3. நீர் தெரிந்தோர் ஈறுகாலம் ஒன்றாய்

Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க Read More »

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து

தேசத்தார்கள் யாரும் வந்து சுவிசேஷ வார்த்தையே கேட்டு உந்தன் ஜோதி கண்டு சேவிப்பாரகள் என்றீரே ஆ கர்த்தாவே வாக்கை நிறைவேற்றுமே வையகம் எல்லாம் மிகுந்த புத்தியீனமுள்ளது அதால் மாந்தர்க்குள் புகுந்த கேடு மா பலத்தது ஆ கர்த்தாவே மாந்தரை இரட்சியும் உம்முடைய வார்த்தை சொல்ல போகும் போதகர்களை நீர் பலப்படுத்தி, நல்ல பத்தி தந்து, நேசத்தை ஆவியாலே ஊழியர்க்கு ஈந்திடும் வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள் உண்மையை உணரவும் அங்கங்குள்ள பொய் மதங்கள் யாவும் நீங்கிப் போகவும்

Desathaarkal Yaarum Vanthu – தேசத்தார்கள் யாரும் வந்து Read More »

Pagalon Kathir polumae – பகலோன் கதிர்போலுமே

1. பகலோன் கதிர்போலுமே இயேசுவின் ராஜரீகமே பூலோகத்தில் வியாபிக்கும் நீடுழி காலம் வர்த்திக்கும். 2. பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார் பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோஷமாய். 3. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே சிரேஷ்ட பாக்கியம் தங்குமே துன்புற்றோர் ஆறித் தேறுவார் திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார். 4. பூலோக மாந்தர் யாவரும் வானோரின் சேனைத் திரளும் சாஷ்டாங்கம் செய்து போற்றுவார் ”நீர் வாழ்க, ராயரே” என்பார்.

Pagalon Kathir polumae – பகலோன் கதிர்போலுமே Read More »

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால்

கர்த்தாவே, பரஞ்சோதியால் ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர் சீர் அருள் என்னும் பலியால் உம் அன்பாய் வோரை உய்ப்பிப்பீர் உம் மந்தை சுத்தமாகவும் விளக்கெல்லாம் இலங்கவும் போதகர் சபையாருக்கும் வரப்பிரசாதம் அருளும் விண் ஆள் தாம் முதல் ஆகியே மற்றோரை ஆங்குயர்த்தவும் விஸ்வாசம், நம்பிக்கை,அன்பே பிரசிங்கிப்போருக்கு ஈந்திடும் எவ்வேயையான பேர்களும் மேலோக ராஜியம் சேரவே கேட்போருக்குக் கற்க விருப்பம் சற்குணம், சாந்தம் நல்குமே நிர்பந்த ஆயுள் முழுதும் ஒன்றாய் விழித்திருக்கவே உம் மேய்ப்பர், மந்தை இரண்டையும் ஆசிர்வதித்துக் காருமே இவ்வாறு

Karthavae Paranjothiyaal – கர்த்தாவே பரஞ்சோதியால் Read More »

Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும்

ஆஹா ஹ ஹா….ஹ்ம் ம் ம் ம்……(2) பரலோகில் வாசம் செய்யும்பரலோகில் வாசம் செய்யும்பரிசுத்த தெய்வம் நீரேபணிகின்றோம் தொழுகின்றோம்பாதம் அமர்கின்றோம் (2) மானானது நீரோடையைவாஞ்சித்து கதறுமா போல் (2)என் உள்ளமும் என் ஆத்மாவும்உம்மைத் தான் வாஞ்சிக்குதே (2) – பரலோகில் கேருபீன்கள் சேராபீன்கள்போற்றிடும் பரிசுத்தரே (2)பாரெங்கிலும் உமையன்றியே பரிசுத்தர் வேறில்லையே (2) – பரலோகில் என் நேசரே என் அழகேஎன் நினைவெல்லாம் நிறைந்தவரே (2)தேடி வந்தேன் உம் சமூகமதைஉம்மை தரிசிக்கவேதேடி வந்தேன் உம் சமூகமதைஉமை தினம் தரிசிக்கவே

Paralogil Vaasam Seiyum – பரலோகில் வாசம் செய்யும் Read More »

Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே

1. நாதா உம் வார்த்தை கூறவே என்னோடு பேசியருளும் கெட்டோரை நானும் தேடவே நீர் என்னைத் தேடிப் பிடியும். 2. வழி விட்டலைவோருக்கு நான் காட்ட என்னை நடத்தும் மன்னாவைப் பசியுள்ளோர்க்கு நான் ஊட்ட என்னைப் போஷியும் 3. மா துன்ப சாகரத்தினில் அழுந்துவோரைத் தாங்கவும், கன்மலையான உம்மினில் நான் ஊன்றி நிற்கச் செய்திடும். 4. அநேக நெஞ்சின் ஆழத்தை என் வார்த்தை ஊடுருவவும், சிறந்த உந்தன் சத்தியத்தை எனக்குப் போதித்தருளும். 5. நான் இளைத்தோரைத் தேற்றவும்

Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே Read More »

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை

நான் மூவரான ஏகரை இன்றே துதித்தழைக்கிறேன் திரித்துவர் மா நாமத்தை என் ஆடையாக அணிந்தேன் மெய் விசுவாசத் திண்மையால் நித்தியத்திற்காய் அணிந்துள்ளேன் கிறிஸ்துவின் அவதாரமும் யோர்தானில் பெற்ற தீட்சையும் சிலுவை மாண்டு மீட்டதும் உயிர்த்தெழல், பரமேறுதல் மா தீர்ப்புநான் பிரசன்னமும் நான் இன்றென்னில் அணிந்துள்ளேன் கேரூபின் நித்திய நேசமும் சேராபின் நீங்கா சேவையும் என்னாதர் கூறும் தீர்ப்புமே அப்போஸ்தலரின் வேதமே முன்னோர் கனா, தீர்க்கர் கூற்றும் கன்னியர் தூய நெஞ்சமும் சான்றோரின் செய்கை சேவையும் நான் இன்றென்னில்

Naan Moovaraana Yeagarai – நான் மூவரான ஏகரை Read More »

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள்

1. தூய பந்தி சேர்ந்த கைகள் சேவை செய்யக் காத்திடும் தூய தொனி கேட்ட செவி தீக்குரல் கேளாமலும். 2. ”தூயர் தூயர்” என்ற நாவு வஞ்சனை பேசாமலும் தூய அன்பைக் கண்ட கண்கள் என்றும் நம்பி நோக்கவும். 3. தூய ஸ்தலம் சென்ற கால்கள் ஒளியில் நடக்கவும் தூய ஆவி பெற்ற எம்மில் நவ ஜீவன் பொங்கவும்.

Thooya Panthi Searntha Kaigal – தூய பந்தி சேர்ந்த கைகள் Read More »