Uncategorized

Konthalikkum Loka Vaalivil – கொந்தளிக்கும் லோக வாழ்வில்

1.கொந்தளிக்கும் லோக வாழ்வில் கேட்போம் மீட்பர் சத்தத்தை நித்தம் நித்தம் மா அன்போடு ‘நேசா! பின் செல்வாய் என்னை’ 2. பூர்வ சீஷன் அந்திரேயா கேட்டான் அந்த சத்தமே வீடு, வேலை, இனம் யாவும் விட்டான் அவர்க்காகவே. 3. மண் பொன் மாய லோக வாழ்வை விட்டு நீங்க அழைப்பார் பற்று பாசம் யாவும் தள்ளி ‘என்னை நேசிப்பாய்’ என்பார் 4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வு வேலை, தொல்லை, ஓய்விலும், யாவின் மேலாய்த் தம்மைச் சார […]

Konthalikkum Loka Vaalivil – கொந்தளிக்கும் லோக வாழ்வில் Read More »

Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம்

விண் போகும் பாதை தூரமாம் என்றே நாம் என்னுவோம் பகைஞரின் கொடுரமாம் வன்மையை உணர்வோம் ஆனால் எப்பாடும் பாவமும் இல்லா அவ்விண்ணையே நாம் கண்டிலோம், நாம் காணவும் இம்மையில் கூடாதே சிற்றின்பத்தை வெறுத்தலும் உள்ளத்தை முற்றும் நாம் கர்த்தாவுக்கு கொப்பிவித்தலும் அரிதென் றெண்ணலாம் ஆனாலோ, பாவம் நீக்கிட அகோர வேதனை மீட்பர் அடைந்து மாண்டதும் நாம் காணக்கூடாதே பக்தன் தோமாவே, உன் போலும் கண்ணால் காணாமலே விஸ்வாசம் தக்கதாயினும் சந்தேகம் கொள்வோமே என்றாலும் காணாதிருந்தும் விஸ்வாசித்தோர் பாக்கியர்

Vin Pogum Paathai Thooramaam – விண் போகும் பாதை தூரமாம் Read More »

Meipparai vetta – மேய்ப்பரை வெட்ட

மேய்ப்பரை வெட்ட ஒனாய் ஆட்டைப் பட்சிக்கவே சிதறடிக்கப்பட்ட மந்தைமேல் பாய்ந்ததே சவுல் சீசரைக் கட்ட மா மூர்க்கமாய்ச் சென்றான் விண் ஜோதி க்ஷணம் கண்டு தரையில் விழுந்தான் ஏன் என்னைத் துன்பம் செய் என்றே காதுற்றுதும் (வாய்) கர்த்தாவே, யாது செய்வேன் என்றான் நடுங்கியும் கிறிஸ்துவின் சத்துரு நல்ல போர்ச் சேவகனானேன் கொல் ஓனாய்ப்போன்றோன் ஆட்டு குட்டிக்கொப்பாயினான் நல் மேய்ப்பர் இயேசு சுவாமி மந்தையைக் காருமே அலையும் ஆட்டை உம்பால் நீர் கொண்டுவாருமே

Meipparai vetta – மேய்ப்பரை வெட்ட Read More »

Un Vaasal Thira – உன் வாசல் திற

1. உன் வாசல் திற, சீயோனே மெய்ப் பொருளானவர் தாமே ஆசாரி பலியாய் உன்னிடம் வந்தனர். 2. கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்? பிதாவின் மைந்தனார் தம் பீடமீது பாவத்தின் நிவாரணம் ஆனார். 3. தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தே தூய தாய் மரியாள் ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான் காணிக்கையாய் வைத்தாள். 4. தாம் எதிர்பார்த்த கர்த்தரை அன்னாள் சிமியோனும் கண்ணுற்ற சாட்சி கூறினார் ஆனந்தமாகவும். 5. சௌபாக்யவதி மாதாவோ தன் நெஞ்சில் யாவையும் வைத்தெண்ணியே

Un Vaasal Thira – உன் வாசல் திற Read More »

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே

1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும் சாத்தான் பாயும் ஓநாய் போல் கிட்டிச்சேரும் நேரமும், நாசமோசம் இன்றியே காரும், நல்ல மேய்ப்பரே. 2.பணம் ஒன்றே ஆசிக்கும் கூலியாளோ ஓடுவோன்; காவல் இன்றிக் கிடக்கும் தொழுவத்தின் வாசல்தான்; வாசல், காவல் ஆன நீர் மந்தைமுன் நின்றருள்வீர். 3.கெட்டுப்போன யூதாஸின் ஸ்தானத்திற்குத் தேவரீர், சீஷர் சீட்டுப்போடவே மத்தியா நியமித்தீர்; எங்கள் ஐயம் யாவிலும், கர்த்தரே, நடத்திடும். 4.புது சீயோன் நகரில் பக்தர் வரிசையிலே நிற்கும் மத்தியாவோடும் நாங்கள் சேரச் செய்யுமே கண்

Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே Read More »

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே

1. ஆ, இயேசுவே, புவியிலே இருந்திரக்கமாக அடியாரை அங்கும்மண்டை இழுத்துக்கொள்வீராக. 2. இழும், இழும், அடியார்க்கும் பரகதி அளியும்; அப்போதெல்லா உபத்ரவ வருத்தமும் முடியும். 3. நீர் எங்களை சேர்த்தும்மண்டை போம் பாதையில் நடத்தும்; அடியார் கால் தப்பாய்ப் போனால் நீர் மோசத்தை அகற்றும். 4. இவ்வுலகம் ஆகா இடம் இழும்; அடியார் தேடும் இடம் பரம்; அங்கும்மிடம் நீர் கொண்ட பேரைச் சேரும். 5. நீர் ரட்சகர், நீர் மீட்டவர் நீரே இம்மானுவேலும், இரட்சியும், இழும்,

Aa Yesuvae Pooviyilae – ஆ இயேசுவே புவியிலே Read More »

Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு

1. தெய்வாட்டுக்குட்டிக்கு பன் முடி சூட்டிடும் இன்னிசையாப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும் உள்ளமே போற்றிடு உனக்காய் மாண்டோராம் சதா காலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம். 2. அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும் கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் விளங்கும் பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்? பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள். 3. சமாதானக் கர்த்தர் பன் முடி சூட்டிடும் போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும் ஆள்வர் என்றென்றைக்கும் ஆளும்

Deivattu Kuttiku – தெய்வாட்டுக்குட்டிக்கு Read More »

Magil Karthavin Manthayae – மகிழ் கர்த்தாவின் மந்தையே

1. மகிழ், கர்த்தாவின் மந்தையே இதோ, கெம்பீரத்துடனே பரத்துக்குள் அதிபதி எழுந்து போனதால் துதி. 2. விண்ணோர் குழாம் மகிழ்ச்சியாய் கொண்டாடி, மா வணக்கமாய் பணிந்து, இயேசு ஸ்வாமிக்கு ஆராதனை செலுத்திற்று. 3. கர்த்தாதி கர்த்தர் நமக்கு தலைவரானார் என்பது பரத்தின் தூதருக்கெல்லாம் விசேஷித்த சந்தோஷமாம். 4. ஆ, இயேசு தெய்வ மைந்தனே, கர்த்தா, பர்த்தா, முதல்வரே, அடியார் நெஞ்சு உமக்கு என்றும் ஆதீனம் ஆனது. 5. விண்ணோரைப் போல் மண்ணோர்களே நம் ஆண்டவரை என்றுமே அன்பாகக்

Magil Karthavin Manthayae – மகிழ் கர்த்தாவின் மந்தையே Read More »

Vaanjaipatta Yesuvae – வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா

1.வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா இந்த பூதலத்திலே அல்லேலூயா! கொஞ்ச நாள் தங்கினீர் அல்லேலூயா பின்பு மோட்சம் ஏகினீர் அல்லேலூயா 2.வான் ஆசனத்திலே அல்லேலூயா வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா துதி பெறும் தேவரீர் அல்லேலூயா பூதலத்தை மறவீர் அல்லேலூயா 3.திருக்கரம் குவித்து அல்லேலூயா திருக்காயம் காண்பித்து அல்லேலூயா திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா மாந்தர்க்காய் மன்றாடுவீர் அல்லேலூயா 4.மண்ணைவிட்டுப் பிரிந்தும் அல்லேலூயா வான லோகம் போயினும் அல்லேலூயா எங்கள் ஜெபம் கேளுமே அல்லேலூயா எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா

Vaanjaipatta Yesuvae – வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா Read More »

Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே

1. கர்த்தாவின் சுத்த ஆவியே நீர் எங்கள் ஆத்துமாவிலே இறங்கி வாசம் பண்ணும் பரம ஜோதியாகிய உம்மாலே நாங்கள் சீர்ப்பட தெளிந்த நெஞ்சும் கண்ணும் தந்து, வந்து மெய் ஜெபத்தை, நற்குணத்தை போதித்தீயும்; மெய்ச் சந்தோஷத்தை அளியும். 2. நீர் போதிக்கும் நல் வார்த்தையே எப்போதும் எங்கள் நெஞ்சிலே மெய்த் தீபமாவதாக பிதா சுதன் இருவரால் இறங்கும் உம்மையும் அதால் திரியேக தெய்வமாக, நல்ல, வல்ல கனிவோடும் பணிவோடும் போற்றிப் பாடும் வாக்கை எங்களுக்குத் தாரும். 3.

Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே Read More »

Deiva Aaviyae – தெய்வ ஆவியே

1. தெய்வ ஆவியே, பூர்வ நாளிலே பலபாஷை பேசும் நாவும் மேன்மையான வரம் யாவும் உம்மால் வந்ததே, தெய்வ ஆவியே. 2. சத்திய ஆவியே, போதகர் நீரே; மீட்பர் அருமையைக் காட்டி, அவர் சாயலாக மாற்றி என்னை ஆளுமே, சத்திய ஆவியே. 3. ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர், சுத்தமற்ற ஸ்பாவம் நீக்க, ஆத்துமாவின் தாகம் தீர்க்க ஜீவ ஊற்று நீர், என்னில் ஊறுவீர். 4. நேச ஆவியே, எந்தன் நெஞ்சிலே ஐயம் நீங்க இச்சை

Deiva Aaviyae – தெய்வ ஆவியே Read More »

Deivaavi Manavaasaraai – தெய்வாவி மனவாசராய்

1. தெய்வாவி, மனவாசராய், வந்தனல் மூட்டுவீர்; உம் அடியாரின் உள்ளத்தில் மா கிரியை செய்குவீர். 2. நீர் சோதிபோல் பிரகாசித்து, நிர்ப்பந்த ஸ்திதியும் என் கேடும் காட்டி, ஜீவனாம் மெய்ப் பாதை காண்பியும். 3. நீர் வான அக்னிபோலவே, துர் ஆசை சிந்தையும் தீக் குணமும் சுட்டெரிப்பீர், பொல்லாத செய்கையும். 4. நற் பனிபோலும் இறங்கும் இவ்வேற்ற நேரத்தில்; செழிப்புண்டாகச் செய்திடும் பாழான நிலத்தில். 5. புறாவைப்போல சாந்தமாய் நீர் செட்டை விரிப்பீர்; மெய்ச் சமாதானம் ஆறுதல்

Deivaavi Manavaasaraai – தெய்வாவி மனவாசராய் Read More »