Uncategorized

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே

பரத்துக்கேறு முன்னமே பேரருள் நாதனார் தேற்றரவாளன் ஆவியை வாக்களித்தார் விருந்து போலத் தேற்றவும் அவ்வாவி சேரவார் எத்தாழ்மையான நெஞ்சிலும் சஞ்சரிப்பார் அமர்ந்த மென்மை சத்தத்தை போல் நெஞ்சில் பேசுவார் வீண்பயம் நீக்கிக் குணத்தை சீராக்குவார் நற்சிந்தை தூய விருப்பம் தீயோன் மேல் வெற்றியும் எல்லாம் அவரால் மாத்திரம் உண்டாகி விடும் ஆ நேச தூய ஆவியே உம் பெலன் ஈந்திடும் சுத்தாங்கம் ஈந்து நெஞ்சிலே நீர் தங்கிடும்

Parathukeru Munnamae – பரத்துக்கேறு முன்னமே Read More »

Deivanbukaaga Unnatha – தெய்வன்புக்காக உன்னத

1.தெய்வன்புக்காக உன்னதக் கர்த்தாவுக்குப் புகழ்ச்சி; ஏன், பாவக்கேட்டை நீக்கின அது மகா திரட்சி மெய்ச் சமாதானம் என்றைக்கும் நரர்கள் மேல் பிரியமும் உண்டாம் இரக்கம் பெற்றோம். 2.மாறாமல் ஆண்டிருக்கிற மகத்துவப் பிதாவே, துதியோடும்மைக் கும்பிடப் பணிகிறோம், கர்த்தாவே அளவில்லாப் பலமாய் நீர் நினைத்த யாவுஞ்செய்கிறீர்; மா பாக்கியர் அடியார். 3.ஆ, இயேசு, தெய்வமைந்தனே, கடன்களைச் செலுத்தி, கெட்டோரை மீட்ட மீட்பரே மாசற்ற ஆட்டுக்குட்டி, மா கர்த்தரே, தயாபரா, அடியார் சத்தங்கேட்டெல்லாச் சபைக்கும் நீர் இரங்கும். 4.மெய்யாகத் தேற்றும்

Deivanbukaaga Unnatha – தெய்வன்புக்காக உன்னத Read More »

Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா

1. பிதாவே, மா தயாபரா, ரட்சிப்பின் ஆதி காரணா, சிம்மாசனமுன் தாழுவேன் அன்பாக மன்னிப்பீயுமேன். 2. பிதாவின் வார்த்தை மைந்தனே, தீர்க்கர், ஆசாரியர், வேந்தே, சிம்மாசனமுன் தாழுவேன் ரட்சணிய அருள் ஈயுமேன். 3. அநாதி ஆவி, உம்மாலே மரித்த ஆன்மா உய்யுமே சிம்மாசனமுன் தாழுவேன் தெய்வீக ஜீவன் ஈயுமேன். 4. பிதா குமாரன் ஆவியே, திரியேகரான ஸ்வாமியே, சிம்மாசனமுன் தாழுவேன் அன்பருள் ஜீவன் ஈயுமேன்.

Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா Read More »

Allelujah Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே

1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், இந்நாளில் சாவை வென்றோராம் விண்மாட்சி வேந்தர் போற்றுவோம். அல்லேலூயா! 2.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், அஞ்ஞாயிறு அதிகாலை நல் மாதர் மூவர் கல்லறை சென்றாரே காண தேகத்தை. 3.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், அம்மூவர் பார்த்தார் தூதன்தான்; வெண் ஆடை தூதன் செல்லுவான்; நாதர் கலிலேயா செல்வார், 4.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ, மாந்தரே, நாம் பாடுவோம், பயந்த

Allelujah Aa Maantharae – அல்லேலூயா ஆ மாந்தரே Read More »

Allelujah Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர்

அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! 1. இப்போது போர் முடிந்ததே; சிறந்த வெற்றி ஆயிற்றே; கெம்பீர ஸ்துதி செய்வோமே அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார் பாதாள சேனையை வென்றார் நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார் அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே, என்றைக்கும் அரசாள்வீரே! களித்து ஆர்ப்பரிப்போமே! அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர் மரித்துயிர்த்திருக்கிறீர்; சாகாத ஜீவன் அருள்வீர் அல்லேலூயா!

Allelujah Ippothu Poor – அல்லேலூயா இப்போது போர் Read More »

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை

1.இந்நாளே கிறிஸ்துவெற்றியை அடைந்து தம் பகைஞரைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோம் ஜெய நாளேன்று பாடுவோம். அல்லேலூயா. 2.பேய் பாவம் சாவு நரகம் என்கேடும் இன்றையத்தினம் எழுந்த கிறிஸ்தின் காலுக்குக் கீழாய் விழுந்து கெட்டது. அல்லேலூயா. 3.பெண்கள் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலம் கர்த்தரைக் கெபியில் பார்க்க வரவே, முன்தான் எழுந்திருந்தாரே. அல்லேலூயா. 4.கெபியைத் தூதன் காண்பித்து, அங்கில்லை வெற்றியாயிற்று, உயிர்த்தெழுந்தாரென்று, போய் அறிவியுங்கள் என்றான் அல்லேலூயா. 5.இரண்டு சீஷரோடன்றே வழியில் கர்த்தர் பேசவே, பேரின்பம் மூண்டு, பிறகு யாரென்ற்றியாயிற்று. அல்லேலூயா. 6.அந்நாளில்

Innaalae Kiristhu Vettriyai – இந்நாளே கிறிஸ்துவெற்றியை Read More »

Yesu Uyirthelunthaal – இயேசு உயிர்த்தெழுந்ததால்

1. இயேசு உயிர்த்தெழுந்ததால், சாவின் பயம் அணுகாது உயிர்த்தெழுந்தார் ஆதலால் சாவு நம்மை மேற்கொள்ளாது அல்லேலூயா! 2. உயிர்த்தெழுந்தார்! மரணம் நித்திய ஜீவ வாசல் ஆகும் இதினால் பயங்கரம் சாவில் முற்றும் நீங்கிப்போகும் அல்லேலூயா! 3. உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய் ஜீவன் ஈந்து மாண்டதாலே இயேசுவை மா நேசமாய் சேவிப்போம் மெய் பக்தியோடே அல்லேலூயா! 4. உயிர்த்தெழுந்தார்! பேரன்பை நீக்கமுடியாது ஏதும் ஜீவன் சாவிலும் நம்மை அது கைவிடாது காக்கும் அல்லேலூயா! 5. உயிர்த்தெழுந்தார்! வேந்தராய் சர்வ லோகம்

Yesu Uyirthelunthaal – இயேசு உயிர்த்தெழுந்ததால் Read More »

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள் நம்மை மீட்க சகித்தார் தெய்வ சித்தத்தால் சிலுவையில் மரித்தார் அவர் ஸ்வாமியாம் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார் அல்லேலூயா பாடுங்கள் நாதன் சாவை ஜெயங்கொண்டார் விண்ணோர் மண்ணோர் மகிழ்ந்தார் நேசக் கர்த்தர் எழுந்தததோ மா அதிசயமன்றோ தந்தை வலப்பக்கத்தில் என்றும் ஆளுவார் மீண்டும் நடுத்தீர்ப்பினில் நம்மை அழைப்பார் வான தூதர் சேனை வந்து விண் பதியை வாழ்த்தவே வார்த்தை அவதாரர்க்கே

Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Read More »

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி

1. சபையாரே கூடிப்பாடி கர்த்தரை நாம் போற்றுவோம் பூரிப்பாய் மகிழ் கொண்டாடி, களிகூரக் கடவோம் இந்நாள் கிறிஸ்து சாவை வென்று எழுந்தார் ஆர்ப்பரிப்போம். 2. சிலுவையில் ஜீவன் விட்டு பின்பு கல்லறையிலே தாழ்மையாக வைக்கப்பட்டு மூன்றாம் நாள் எழுந்தாரே! லோக மீட்பர், வல்லநாதர் வெற்றிவேந்தர் ஆனாரே. 3. மீட்பரே, நீர் மாட்சியாக சாவின் கூரை முறித்தீர் நாங்கள் நீதிமான்களாக பிதாமுன்னே நிற்கிறீர் என்றென்றைக்கும் விண் மண்ணோரும் உம்மை வாழ்த்தப் பெறுவீர். 4. சாவின் ஜெயம் ஜெயமல்ல தேகம்

Sabaiyorae KoodiPaadi – சபையாரே கூடிப்பாடி Read More »

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர்

1. நல்ல ஜெயம், போர் செய்தின்றே வரும் மகாராஜாவுக்கே; அவரைச் சேர்ந்தோர்யாவரும் இந்த ஜெயத்தைப் பாடவும். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 2. மீட்பர் அடைந்த வெற்றியால் சிஷ்டி மலரும் களிப்பால்; சீர்கெட்ட பூமிக்குள்ளதாம் சாபம் அத்தால் நிவர்த்தியாம். நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம், அல்லேலூயா. 3. கர்த்தர் மரிக்கும் நாளிலே இருண்ட சூரியன் இன்றே அவர் உயிர்த்தவெற்றிக்கு ப்ரகாசமாய் விளங்கிற்று. நல்ல ஜெயம், நல்ல ஜெயம், முடிவில்லாப் பூரிப்புமாம்,

Nalla Jeyam Poor -நல்ல ஜெயம் போர் Read More »

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ்

பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் வென்றுயிர்த்தோரைப் போற்றிப் பாடுவோம் பண்டிகை நாள் மகிழ் கொண்டாடுவோம் அருளாம் நாதர் உயிர்த்தெழும் காலம் மரம் துளிர் விடும் நல் வசந்தம் பூலோகெங்கும் நறுமலர் மணம் மேலோகெங்கும் மின் ஜோதியின் மயம் முளைத்துப் பூக்கும் பூண்டு புல்களும் களிப்பாய் கர்த்தர் ஜெயித்தார் என்னும் சாத்தான் தொலைந்ததால் விண்மன், ஜலம் கீர்த்தனம் பாடிக் களி கூர்ந்திடும் குருசினில் தொங்கினோர் நம் கடவுள் சிருஷ்டி நாம் தொழுவோம் வாருங்கள் அநாதி நித்திய தெய்வ மைந்தனார்

Pandikai Naal Magil – பண்டிகை நாள் மகிழ் Read More »

Valka Paakkiya Kaalai – வாழ்க பாக்கிய காலை

1.”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம் உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும். ”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார் இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்; 2. துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே; பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும் துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே. 3. மாதங்கள்

Valka Paakkiya Kaalai – வாழ்க பாக்கிய காலை Read More »