Uncategorized

Nandriyaal paadiduvom – நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்நல்லவர் இயேசு நல்கிய எல்லாநன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய் பிரித்தஎங்கள் தேவனின் கரமேதாங்கியதே இந்நாள் வரையும்தயவாய் மா தயவாய் 2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரைஉடன் சுதந்திரராய் இருக்ககிருபையின் மகா தானமது வருங்காலங்களில் விளங்க 3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்சேவையில் மரித்தார்சேர்ந்து வந்து சேவை புரிந்துசோர்ந்திடாது நிற்போம் 4. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினைஅறிந்தே வந்திடுவீர்அளவில்லா திரு ஆக்கமிதனைஅவனியோர்க்களிப்பீர் 5. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்சீக்கிரம் வருவார்சிந்தை வைப்போம் சந்திக்கவேசீயோனின் […]

Nandriyaal paadiduvom – நன்றியால் பாடிடுவோம் Read More »

Anbaram Yesuvai Parthukonde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே

அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டேஇன்பமாக அவர் பாதையோடேதாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே 1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதேஅன்பர் அறியாமல் வந்திடாதேகண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே 2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்வியாகுலம் உன்னை விரட்டிடினும் ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார் 3. முட்செடி போலே பற்றிடுமேமோசம் அடையாய் நீ முற்றீலுமேஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே 4. வஞ்சனையான இப்பார்தலமேவஞ்சிக்குமே உன்னைத் தந்திரமாய்வாஞ்சித்திடாதே மோசமானஇப்பார்தலத்தை! Anbaram Yesuvai Paarthu Kondeinbamaaga avar paathaiyodethaamae vazhiyum saththiyamum

Anbaram Yesuvai Parthukonde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே Read More »

Belamula Nagaramam Yesuvndai – பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை

1. பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டைபயமின்றி ஓடி நீ வந்திடுவாய்சஞ்சலத்திற்கொரு வழியில்லையேசந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார் 2. நிலையில்லா உலகத்தின் அலைகளாலேஅலைந்திடும் பயனென்ன புதல்வனே நீவிசுவாசக் கப்பலில் ஷேமமாகயாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம் 3. கழுகு போல் பறந்து நீ உன்னதத்தில்வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக் கொள்காத்திருந்திடுகையில் ஈந்திடுவார்பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு 4. மரணம் தான் வருகினும் பயப்படாதேவிரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்யாதொன்றும் உன்னைப் பயப்படுத்தஎங்குமில்லை யென்று விசுவாசிப்பாய் 5. ஆறுதலடையு மந்நாடுசென்றுஇயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்பரம

Belamula Nagaramam Yesuvndai – பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை Read More »

Polla Paava Logathin Meal – பொல்லாப் பாவ லோகத்தின் மேல்

1. பொல்லாப் பாவ லோகத்தின் மேல் நல்லான் அன்புகூர்ந்தார்! எல்லார்க்குமிவ ரீடேற்றம் நல்கினார் தானமாய் பல்லவி ஓ! இதென்ன மா நேசம்! என் மேற்கொண்ட பாசம்! வன் குருசில் மீட்பர் மாள வரச் செய்த நேசம்! 2. நம்பிக்கையாலென் நாதனை சொந்தமாக்கிக் கொள்வேன்; அவர் சாவால் மீட்படைந்தேன் ஆம்! சுத்தமானேன் நான் – ஓ! இதென்ன 3. அன்பு மகிமை பூர்த்தியாய் அளிக்கும் சுத்தர்க்கு, நம்ப இயேசு கிறிஸ்துவை நசியும் உள் தீமை – ஓ! இதென்ன

Polla Paava Logathin Meal – பொல்லாப் பாவ லோகத்தின் மேல் Read More »

UNNADHATHIL UYARNTHAVARE – உன்னதத்தில் உயர்ந்தவரே

1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே (2) நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே (2)இயேசுவே இயேசுவே (2) 2.நீர் என்னை சுமந்ததாலேதடைகளையும் நான் தாண்டி வந்தேனேதிருக்கரம் தாங்கினதாலேமடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே (2) நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே (2)இயேசுவே இயேசுவே (2) 3.உலகத்தின் ஆழத்திலேமூழ்கிடாது என்னை தப்புவித்தீரேஉந்தன் அன்பின் ஆழத்திலேஇன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே (2) நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ஆராதிக்க சிறந்தவரே

UNNADHATHIL UYARNTHAVARE – உன்னதத்தில் உயர்ந்தவரே Read More »

Enthan Nenjukullae Nee Piraka – எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா – இனி அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா 1. பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன்

Enthan Nenjukullae Nee Piraka – எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க Read More »

Ratchakar Oruvarin Anbu – இரட்சகரொருவரின் அன்பு

1. இரட்சகரொருவரின் அன்பு பேரன்பென்று கேள்விப்பட்டேன்! ஆனால் அவர் மோட்சம் விட்டது என் மேல் கொண்ட பாசத்தால் தானோ? பல்லவி ஆம்! ஆம்! ஆம்! என்னை நேசித்ததாலே தானே ஆம்! ஆம்! ஆம்! என்மேல் கிருபை கூறுகிறார் 2. அவர் பாடும் இரத்தஞ் சிந்தலும் அதிகமாய்க் கேள்விப்பட்டேன்! ஆனால் மெய்தானா இவை எல்லாம்? பாவி எந்தனுக்காகவே தான்! – ஆம்! ஆம்! 3. இந்த இயேசுவினடியார்க்கு மேல் வீடொன் றிருக்கிறதாம்! ஆனால் ஏழைப் பாவி எனக்கு அங்கோர்

Ratchakar Oruvarin Anbu – இரட்சகரொருவரின் அன்பு Read More »

Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே

பல்லவி மனந்திரும்பு மானிடனே – உடனே! தினந்தனை வீணாய்க் கழியாதே! சரணங்கள் 1. காலம் விலையுள்ளது கடத்தாதே ஞாலமதில் ஜீவன் நிலையாதே! காலமும் மரணமும் கடுகிடுது சீலன் இயேசுவை அண்டி சீர்ப்பட்டிடு – மனம் 2. கிருபையின் காலத்தை இழக்காதே! திருவசனத்தை அவமதியாதே தருணமறிந்து உணர்வடைவாயே மரணம் வருது குணப்படுவாயே! – மனம் 3. காயம் விட்டுயிர் தான் பிரிந்திடுமே மாய உலகின் மேன்மை மாய்ந்திடுமே! தீய வழியை விட்டு திரும்பாயோ? தூயனைத் தேடி இரட்சை அடையாயோ?

Mananthirumbu Maanidanae – மனந்திரும்பு மானிடனே Read More »

Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து

1. பாவியே சாவுக்குத் தீவிரித்து தூய இரட்சகரின் வேண்டுதலை தீய மனதுடன் தள்ளி, நீயும் தூரம் போகாதே கிருபை விட்டு! பல்லவி வந்திடு இயேசு மந்தையில் நீ தந்திடுவாய் சிந்தைதனை; இங்கிதம் பாட பாவியே நீ வந்திடு இயேசுவிடம் 2. அன்பா யழைத்தார் பல தடவை இன்னும் நின்றாத்துமம் தட்டுகிறார்! உன்னோடு வாழ இடங்கொடென்ற முன்னவன் வேண்டுதல் தட்டிடாது – வந்தி 3. பேரொளி மன்னிப்பின் நாட் செல்லுதே சேரும் விண் வாசலடைகின்றதே! தாரணி விட்டுதான் நீங்கிடுவாய்

Paaviyae Saaukku Theevirithu – பாவியே சாவுக்குத் தீவிரித்து Read More »

Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே

பல்லவி வையகந்தனை நடுத் தீர்க்கவே இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக் கேற்க! அனுபல்லவி பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க பொற்பதி தனில் பரன் சேயரைச் சேர்க்க சரணங்கள் 1. வானங்கள் மட மடவென் றகன்றிடவே, மாநிலம் எரிந்து மாய்ந்தழிந்திடவே, பானுடன் மதியுடு பஸ்பமாகிடவே, பஞ்ச பூதங்களும் வெந்துருகிடவே – வைய 2. முக்கிய தூதனெக்காளமே தொனிக்க முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க, ஆக்ஷண முயிருளோர் மறுவுரு தரிக்க ஆண்டவர் வருகிறார் பக்தர்கள் களிக்க – வைய 3. யாவரின் செய்கையும்

Vaiyakanthanai Nadu Theerkavae – வையகந்தனை நடுத் தீர்க்கவே Read More »

Devan Varum Naalathilae – தேவன் வரும் நாளதிலே

1. தேவன் வரும் நாளதிலே – என் நண்பா பூமியிலுள்ள மனுஷரெல்லாம் ஏகமாகக் கூடுவார்கள் – என் நண்பா இயேசு முன்னே சேருவார்கள் 2. புத்திகெட்ட மானிடர்கள் – கத்திக் கத்தி அலறுவார்கள் சுத்தமுள்ள மானிடர்கள் – என் நண்பா கர்த்தனேசைச் சேர்ந்திடுவார் 3. தூஷணங்கள் பேசினோரை – மாசணுகா நாளதிலே மோசமுள்ள தீ நரகில் – என் நண்பா நாசமாகத் தள்ளிடுவார்! 4. மறுதலித்த பேர்களெல்லாம் – பரிதபிப்பார் தீ நரகில் நெறி தவறிப் போகாமலே

Devan Varum Naalathilae – தேவன் வரும் நாளதிலே Read More »

Mega Meethil Yesu Rajan Vegam Vaararae- மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே

பல்லவி மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே! அனுபல்லவி ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாறாரே! சரணங்கள் 1. ஆண்டவர்தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாறாரே! மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் – மேக 2. கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே – மேக 3. பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடு பட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லா பலனை கூவியே கொடுத்திடுவார் – மேக 4. அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல்

Mega Meethil Yesu Rajan Vegam Vaararae- மேக மீதில் இயேசு ராஜன் வேகம் வாறாரே Read More »