Kanna Moodi Thoongu Christmas song lyrics – கண்ண மூடி தூங்கு
கண்ண மூடி தூங்கு சின்ன செல்லமே
உன்பிஞ்சு முகம் தெய்வம் தந்த வரமே
கண்ணுக்குள்ளே நீயே செல்ல தங்கமே
நீ கண் அசைத்தால் போதும் குட்டி தங்கமே
நான் உந்தன் தாயாக நீ எந்தன் பிள்ளையாய்
மகனே ஒன்றே போதும் இந்த உலகில்
காலங்கள் மாறினும் மாறாத பாசமாய்
அன்பே நீயும் இந்த அன்னை மடியில்
மகனே என்று நான் அழைக்க உன் பிஞ்சு உள்ளம் துள்ள கண்டு நான் மகிழ்வேன்… உறவே என்று நீ அழைக்கும் அந்த நேரம் என்று என்று பார்த்து நின்றேன்…
என் குட்டி அமுதே உன் கொள்ள சிரிப்பே
கொட்டி தவழும் கொள்ளை அழகே
கண்ண மூடிதூங்கு
தந்தையே நானுந்தன் சீடனாய் என்றென்றும்
உமது விருப்பம் போல் எல்லாம் நிகழும்
விந்தயே நிகழ நீர் இங்கு வந்தீரே
அதுவே உம்முடைய சித்தம் ஆகட்டும்
தோளில் என்னை நீர் சுமக்கும் அந்த நேரம் என்னில் என்றும் ஆனந்தமே
காலமுள்ள நாள்முழுதும் உன்னை மட்டும் என்றும் நானும் போற்றிடுவேன்
என் இயேசு ராசா என் அன்பு ரோசா
என் உள்ள முழுவதும் நீ தங்க ரோசா
கண்ண மூடி தூங்கு