இயேசுவே உம்மைப் போல

Lyrics

இயேசுவே உம்மைப் போல
என்னை நீர் வனைந்திடுமே
குயவனே உந்தன் கையில்
களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2)

பூமிக்கு உப்பாய் நானிருக்க
பாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)
சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)
அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2)

உந்தன் சிந்தையை நான் தரிக்க
உந்தன் சாயலை நான் அணிய (2)
எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)
எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2)

நான் எரிந்து உம்மை பிரகாசிக்க
எந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)
உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)
சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

Leave a Comment